Wednesday, December 29, 2010

மன்மதன் அம்பு

கடைசியா நானும் இந்த படத்தை பாத்துட்டேன். நான் பண்ணின ஒரே தப்பு பஞ்சதந்திரம், பம்மல் உவ்வே சம்பந்தம் மற்றும் தெனாலி அளவுக்கு எதிர்பாத்தது தான்.பம்மலைத் தவிர்த்து மீதி இரண்டும் கமல் மற்றும் ரவிக்குமார் ஜோடி கலக்கி இருந்தார்கள். இதில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறார்களா என்றால் கசப்புடன் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 

கதை இந்நேரம் நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியணும்னு அவசியம் இல்லை. பாதி வலைப்பதிவர்கள் கிழித்து தொங்கப்போட்டு இருப்பார்கள். இருந்தாலும் விட்ற மாதிரி இல்லை நான். நல்ல டைமிங்கோட ஒரு ரைஹ்மிங்கோட சொல்றேன் கேளுங்க... ( வசன உதவி அநேகமாக சிங்கமுத்து-தலைநகரம் படத்திலிருந்து ) 

Madhavan and Kamal Hassan
ஓய்வு பெற்ற ராணுவ தளபதி கமல்,  தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரின் புற்று நோய் சிகிச்சைக்காக பணம் ஈட்டும் பொருட்டு தொழிலதிபர் மாதவன் சொல்லும் ஒரு உளவாளி வேலைக்கு ஒத்துக்கொள்கிறார். தான் காதலிக்கும் திரைப்பட நடிகையின் பழக்க வழக்கங்களின் மேல் சந்தேகம் கொள்ளும் மாதவன், அதை உறுதிப்படுத்தி கொள்வதர்க்காக கமலை அனுப்புகிறார். ஆரம்பத்தில் இருந்தே கொடுத்த வேலையை செவ்வனே செய்யும் கமல், திரிஷா ஒரு "நல்ல பெண்" என்று மாதவானிடம் சான்றிதழ் வழங்குகிறார். 

Kamal Hassan and Trisha
தான் நம்பிய விஷயம் ( திரிஷாவுக்கு வேறு ஒருவருடன் கள்ள உறவு ) மற்றவர்கள் பொய் என்று சொல்வதை ஏற்கின்ற மனமில்லாத மாதவன் "நல்லவளை நல்லவள் என்று சொல்வதற்க்கு உனக்கு எதுக்கு கூலி" என்று நினைத்து, கமலுக்கு பேசிய பணத்தை கொடுக்க மறுத்து நாடு திரும்பும்படி கூறுகின்றார். மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நண்பனை காக்க இந்த பணம் அவசியம் என்பதால், தான் வேலை முடித்து விமான நிலையத்துக்கு திரும்பும் பாதையில் த்ரிஷாவை வேறு ஒருவருடன் பார்த்ததாக பொய்யுறைக்கும் கமல், தன் பணம் கிடைக்கும் வரை இந்த பொய்யை தொடர முடிவு செய்து... அதன் பிரதி பலன்களே மீதி... 

இதன் நடுவில் த்ரிஷா தான் எதிர்பாக்கும் அத்தனை புருஷலட்சணமும் கமலிடம் இருப்பதாக நம்பி அவரை காதலிக்க தொடங்க... மாதவனின் காதல் பப்படம் ஆகிறது. அதை சரிக்கட்ட இன்னொரு கேரக்டர் இருக்கின்றது படத்தில்... முடிஞ்சா நீங்களே கண்டுபுடிங்க... நடுவில் கமலுக்கென்று ஒரு ஃபிளாஷ்பேக். அது வெறும் ஒரு பாட்டுக்கும், கமல் மீதான த்ரிஷாவின் காதலுக்கும் சற்று உரம் சேர்க்கும் படி அமைந்திருக்கின்றது. 

Madhavan, Kamal Hassan and Trisha
என்னடா இவ்வளவு கதை சொன்னவன் முக்கியமான விஷயத்தை சொல்லாமலே போய்ட்டானேன்னு பாக்குறீங்களா... அது மட்டுமாவது இனிமே இந்த விமர்சனம் படிச்சிட்டு போறவங்களுக்கு ஒரு சர்ப்ரைஸாக இருக்கட்டுமே என்று நிர்வாகம் முடிவு செய்துள்ளது. உங்களுக்கு நேரம் இருந்து படம் பார்ப்பதற்க்கு ஒரு நல்ல துணை (ஃபிரண்ட்ஸ்-ன்னு கூட வச்சிக்கலாம்) இருந்து, காசும் கையில இருந்தால் தாராளமாக இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம். 

பின் குறிப்பு :- பஞ்ச தந்திரம் மற்றும் பம்மல் முதன் முறை திரை அரங்கிர்க்கு சென்று பார்த்தபோது சரியாக அதிலுள்ள காமெடி-கள் புரியாமல் போனதால் என்னால் அவ்வளவு ஆழமாக ரசிக்க முடியவில்லை. ஆனால் அதற்க்கு அப்பறம் ரொம்ப புடிச்சு போனது வேற விஷயம். ஆனா இதில் அதற்கான முகாந்திரம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒரு வேலை கிரேஸி மோகனுக்கு மட்டுமே வாய்த்த வாய்ப்பாக இருக்கலாம். 

Saturday, December 4, 2010

சிக்கு புக்கு - டயர் பஞ்சர் ஆயிடுச்சு

    ஆர்யாவை நம்பி படத்துக்கு போனதுக்கு எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்... படம் ஆரம்பித்து ஒரு மணி நேரம் உள்ளே இருந்தாலே பெரிய விஷயம். சரி பாத்தாச்சு, அப்புடியே விமர்சனம் போட்டுடலாம்னு வந்தேன்... 


ஆர்யா ஷ்ரேயா... லண்டன் வாழ் இளைஞ இளைஞிகள். இவங்க தன்னுடைய சில சொந்த பிரச்சினைகளுக்காக இந்தியா வர, வந்த இடத்தில் பெங்களூர்-ல்இருந்து மதுரை செல்ல வேண்டிய விமானம் ரத்தாக, தரை மார்க்கமாக மதுரை செல்ல முடிவு செய்து புறப்படுகிறார்கள்... இவங்க மதுரை போயி சேருவதர்க்குள் நடைபெறும் காப்ராக்களே, திரைப்படம். 

நடுவில் அப்பா ஆர்யாவினுடைய காதல் டிராக் வேறு தனியாக செல்கின்றது. அந்த கதை ஏன் தான் வருகிறதென்றே தெரியவில்லை. அப்புடி வந்தாலும் கடைசியில் ஒரு ட்விஸ்ட் வச்சாறு பாருங்க டைரடக்கரு... நான் அப்புடியே மெர்சல் ஆயிட்டேன்... அப்பா ஆர்யா கதாபாத்திரம் கிளைமாக்ஸ்-யில் ஒண்ணும் இல்லாத விசயத்துக்காக படம் முழுக்க காட்டப் பட்டது தான் கொடுமை. அதுக்கு பதிலா அந்த கதாபத்திரைத்தே வைத்து ஒரு சுவையான கதையை சொல்லி இருக்கலாம். 


படத்துல வர எல்லா காட்சிகளும் சரியான ஸ்லோ அப்புறம் எளிதில் கணிக்க கூடியதா இருக்குது. அப்புறம் படத்தோட ஒரு பெரிய பலவீனம் பாடல்கள். 

மதராசபட்டினம் மாதிரி பழைய காலத்து கதைன்னு சொன்ன உடனே நம்ம ஆளு சரின்னு சொல்லிட்டாறு போல... 

அண்ணே சந்தானம் பழைய படங்களில் வருவது போல, படத்திற்க்கு சிறிதும் சம்பந்தமே இல்லாத தனி டிராக் காமெடியாக வந்து செல்கின்றார். அதுவும் ஒண்ணும் சிறப்பாக இல்லை. ஒரு வேலை பாஸ் (எ) பாஸ்கரன்-யில் இவருடைய அதீத பங்கினால் தான் படம் வெற்றியடைந்ததால் இதில் வேண்டுமென்றே காட்சிகளை குறைத்து விட்டார்களோ என்னவோ ? யாருன்னு நான் தான் சொல்லி உங்களுக்கு தெரியனுமா ?  



ஷ்ரேயா... இந்த அம்மா சந்தோஷ் சுப்ரமணியம் படத்தை நெறைய தடவை பாத்துட்டாங்கன்னு நினைக்குறேன். ஜெனீலியா-வின் அட்டு காப்பியாக படம் முழுவதும் வலம் வருகிறார். 

ஒரு வேளை உங்களுக்கு இந்த படத்தை தியேட்டர் போயி பாக்க முடியலைன்னா, இடைவேளை வரை ஜப் வீ மேட்-ஐயும் அதாங்க கண்டேன் காதலையும், இடைவேளைக்கு அப்புறம் புதுக்கோட்டையிலிருந்து சரவணனும்... கிளைமாக்ஸ்-க்கு குட்டி இல்லைன்னா ஏதாவது ஒரு தமிழ் படத்தையும் பாத்துக்குங்க... 

முடியல... அப்புறமா வர்றேன்... 

டிஸ்கி:- என் நண்பர் Unstoppable இல்லைன்னா ரத்த சரித்திரம் பாக்கலாம்னு சொன்னாரு, நான் தான் அவரை வம்படியா இந்த படத்துக்கு கூட்டிட்டு போனேன். பாதி படத்துலையே என்னை அவரு கெட்ட வார்த்தைல திட்ட ஆரம்பிச்சிட்டாரு. என்னத்த சொல்றது போங்க... 

இந்த காயத்தை ஆற்ற நாளைக்கு ரத்த சரித்திரம்... 

இண்ட்லி மற்றும் தமிழ்மனத்துல ஓட்டு போடுங்க... அது உங்க கடமை... 

Friday, December 3, 2010

IT Jokes - தகவல் தொழில்நுட்ப சுவையான சம்பவங்கள்

பொதுவாக ஒரு அழுவலகத்தில் வேலையில் இருந்தால் கண்டிப்பாக அங்கு பல சுவையான சம்பவங்கள் நடக்கும். அதுவும் இளைஞர்கள் இருக்கும் இடத்தில் இந்த மாதிரியான விசயங்களுக்கு பஞ்சமே இருக்காது. அதுவும் IT துறையில் சொல்லவே தேவை இல்லை. அப்படி நான் பணியாற்றிக் கொண்டு இருந்த எனது முன்னாள் அழுவலகத்தில் நான் சந்தித்த சில சுவாரஸ்யமான விஷயங்கள்...
சம்பவம் 1

Computer Techie
நான் என்னுடைய பழைய அழுவலகத்கில் கணினி பழுது பார்க்கும் ( Desktop Engineer ) வேலையில் இருந்தேன். ஒவ்வொரு பயனாளர்களும் ( End users ) தங்கள் கணினியில் ஏதாவது பிரச்சினைகளை சந்திக்கும் போது எங்களை அழைத்து பிரச்சினைகளை சரி செய்வது வழக்கம். அன்றும் அதே போல் ஒரு துறையின் துணைப் போது மேலாளர் ( Deputy General Manager ) என்னை அழைத்தார்.

இந்த அழுவலகமானது கனரக வாகனங்களை உற்பத்தி செய்யும் அழுவலகம். அதனால் இங்கு இருக்கும் கடைநிலை பயனாளர்களுக்கு கணினியை பற்றிய போதிய புரிதல்/அறிவு  இருக்காது. இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால் இது அவகளுடைய துறை கிடையாது...

சரி விசயத்துக்கு வருவோம்... அவர் தன்னுடைய கணினியில் இமெயில் வேலை செய்யவில்லை என்று புகார் செய்து இருந்தார். நாங்களும் இங்கு இருந்து கொண்டு எல்லா வழங்கிகளும்( Server ) அதனுடைய சேவைகளும் ( Email Service ) சிறப்பாக வேலை செய்வதாக சொல்லி, அவருடைய கணினியை மீள்துவக்க ( Restart ) சொன்னோம். அவரும் அவ்வாறே செய்து விட்டு பார்த்து விட்டு மறுபடியும் எங்களை அழைத்து தற்பொழுதும் வேலை செய்யவில்லை என்றார். ஆக இந்த பிரச்சினையை நேரில் சென்று தான் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து நான் கிளம்பினேன்.

அங்கு நான் சென்றடைந்ததும் அவரை நான் ஒரு முறை முயற்ச்சி செய்து பாக்க சொன்னேன். அப்பொழு அவர் 1,2,3,4,5 என்று டெஸ்க்டாப்-யில் இருக்கும் ஒவ்வொரு ஐகான் வரிசைகளை எண்ணி கொண்டு ஐந்தாவது வரிசையின் கடைசியில் உள்ள ஐகான்-ஐ தேந்தெடுத்து டபுள் கிளிக் செய்தார். அப்படி செய்து விட்டு

"பாத்தீங்களா தம்பி, நானும் காலைல இருந்து இதை தான் பண்ணிட்டு இருக்குறேன், இமெயில் ஓபன் ஆக மாட்டேங்குது. தினமும் இங்க தான் கிளிக் பண்ணுவேன், இமெயில் ஓபன் ஆகிடும். இன்னைக்கு என்ன பிரச்சினையோ? கொஞ்சம் பாத்து சரி பண்ணி குடுங்க... " என்றார்...

எனக்கோ சரியான சிரிப்பு. ஏனென்றால் அவர் டபுள் கிளிக் செய்தது ஒரு வோர்ட் ஃபைல்-க்கான ஐகான். அதை அவர் ஒவ்வொரு முறை டபுள் கிளிக் செய்யும் போதும் அந்த வோர்ட் ஃபைல் தான் அவருக்கு திறந்திருக்கிறது. இந்த பிரச்சினையை தான் இவர் இமெயில் சேவை வேலை செய்யவில்லை என்று எங்களிடம் புகாராக அளித்திருந்தார்.

மேலும் அவரிடம் விசாரித்ததில், அவர் ஒவ்வொரு முறை இமெயில் சேவையை பெற இப்படி தான் ( அதாவது ஐகான் வரிசைகளி எண்ணி, ஐந்தாவது வரிசையில் இருக்கும் கடைசி ஐகான்-யை டபுள் கிளிக் செய்து) செய்வதாக கூறினார்.

யோசித்து பார்த்ததில், முன்தினம் யாரோ ஒருவர் டெஸ்க்டாப்-ல் இருக்கும் ஐகான்-களை Arrange Icons by Name கொடுத்து விட்டு மாற்றியிருக்கக் கூடும் என்று தோன்றியது.

அவ்வளவு தான் ஜோக் முடிஞ்சிடுச்சு... அடுத்ததா படிக்க போங்க...

சம்பவம் 2

Helpdesk Peoples
என்னுடைய அழுவலகத்தில் ஒரு புது நபரை வேலைக்கு அமர்த்தினார்கள். அவனோ இப்பொழுது தான் புதிதாக படித்து முடித்து முதன் முதலாக வேலைக்கு வருகிறவன். கணினியைப் பற்றிய அறிவு அவனுக்கு சுத்தமாக இல்லை. ஒரு டிரெய்னி-யாக அவனை நியமித்திருந்தனர்.மதியம் எல்லாரும் உணவு இடைவேளைக்கு செல்லும் நேரத்தில் அவனை கஸ்டமர் கால்ஸ் அட்டென்ட் செய்ய அமர்த்தி விடுவது வழக்கம்..

அன்று ஒரு நாள் இப்படித் தான், ஒரு கஸ்டமர் ஒரு சின்ன சிஸ்டம் எர்ரர் பிரச்சினைக்காக அழைக்க, என்னுடைய நண்பரோ ஒரு சிஸ்டம் இன்ஸ்டாலேஷன்-யில் வேலையாக இருந்ததால், அந்த எர்ரர் செய்தியை ஒரு ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வாங்கி வைக்க சொன்னார். புதியவருக்கோ ஸ்க்ரீன்ஷாட் எப்படி எடுப்பது என்பது கூட தெரியாது. அதையும் என் நண்பரே சொல்லிக் கொடுத்தார். பிறகு அந்த பிரச்சினை சரி செய்யப் பட்டது.

மற்றொரு நாள் இதே மாதிரி ஒரு கஸ்டமர் அழைக்க, முன்செய்தது போல அவரிடமும் இவன் ஸ்க்ரீன்ஷாட் கேக்க, கஸ்டமர் செம காண்டு ஆகி விட்டார். அவரு எதுக்காக அவ்வளவு டென்ஷன் ஆகி இருப்பாருன்னு நீங்க நெனைக்குறீங்க ?

அவருக்கு வந்த எர்ரர் மெசேஜ்

NTLDR Missing...

சிஸ்டம் பூட் ஆகவில்லை என்று. :)

குறிப்பு :- ஐயா இண்ட்லி-யில் ஓட்டு போடுங்க சாமி....பதிவு மொக்கையா இருந்தாலும் ஓட்டு போடுங்க சாமி...

Sunday, August 22, 2010

நான் மகான் அல்ல - என் பார்வை

சாதாரண சென்னை பையனாக இருக்கும் ஒருவன் தனக்கு என்று ஒரு பிரச்சினை என்று வந்தவுடன் எப்படி மாறுகிறான் என்பது தான் படத்தின் ஒரு வரி கதை. அதை எவ்வளவு சுவாரஸ்யமாக சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

Naan-Mahaan-Alla-wallpaper

படித்து முடித்து வேலைக்கு போகாமல், நண்பர்களுடன் ஊர் சுற்றி, தண்ணி அடித்து பாத்தாத குறைக்கு ஒரு பெண்ணை காதலித்து கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் கதை இது. ஜீவாவாக கார்த்தி, பிரியாவாக காஜல் அகர்வால். கார்த்தி தான் தோழி ஒருவரின் திருமனத்தின் போது காஜலை சந்திக்கிறார். கண்டதும் காதல். அவளிடன் தான் காதலை சொல்ல அவர் செய்யும் வேலைகள் நம்மை ரசிக்க வைக்கின்றது. இந்த காட்சிகள் இடைவேளை வரை தான். இடைவேளைக்கு அப்புறம் நாயகியை திரையில் பார்க்க முடிவதில்லை.

படத்தில் பாடல்கள் அளவோடு இருப்பது ஒரு பலமாக தோன்றுகிறது. மொத்தமே 3 பாட்டு தான் என்று நினைக்கிறேன். இடைவேளைக்கு முன் 2 பட்டு. இடைவேளைக்கு அப்புறம் ஒரு சோக பாட்டு. படத்தின் குறிப்பிடத் தக்க விஷயம் என்றாள் அது வில்லன்கள் தான். ரஜினி படத்தில் வருவது போல ஹீரோவை விட வில்லன்களுக்கு இதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. அதீத வன்முறை படத்தில் இருக்கிறது. அதனால் குழந்தைகள் இந்த படத்திற்க்கு அழைத்து செல்வது கேள்விக்குறியே.

naanmahaanalla230610_15

வில்லனின் நண்பன் ஒருவன் தான் காதலிக்கும் பெண் ஒருவரை கடத்தி திருமணம் செய்ய நினைத்து தன்னுடைய வில்லன் நண்பனிடன் உதவி கேட்கிறான். அவர்கள் அந்த பெண்ணை கடத்த ஒரு கால் டாக்ஸி எடுக்கிறார்கள். அந்த கால் டாக்ஸி டிரைவர் தான் கார்த்தியின் அப்பா ஜெயப்ரகாஷ். இந்த விஷயம் தெரிந்த அவர் இதற்க்கு தன்னால் உதவி செய்ய முடியாது என்று சொல்லி விடுகிறார். ஒருவழியாக அவரை சமாளித்து வரும் அவர்கள், அந்த பெண்ணையும் அந்த பையனையும் தங்களுடைய அறையில் தங்க வைக்கிறார்கள்.

சபல புத்தி உடைய ஒரு நண்பர் அந்த காதலர்களுக்குள் நடக்குக்ம் காசமுசாவை பார்த்து இவனுக்கு மூடு மாற அந்த பெண்ணை கற்பழித்து சண்டைக்கு வந்த அந்த பெண்ணின் காதலனையும் கொலை செய்கிறார்கள். பிணத்தை துண்டு துண்டாக வெட்டி குப்பையில் வீசி விடுகிறார்கள். இந்த கொலைக்கு சாட்சி என்று வந்தால் அது டாக்ஸி டிரைவர் ஜெயப்பர்காஷாக தான் இருக்க முடியும் என்று அவரையும் கொலை செய்ய நினைத்து கொலையும் செய்து விடுகிறார்கள்.

naanmahaanalla230610_18

பிறகு நாயகன் நாயகன் இவர்களை கண்டுபிடித்து பழி வாங்குவதே கதை.

இந்த படத்தில் லாஜிக் எதிர்பார்ப்பது தப்பு என்று எனக்கு தெரியும். இருந்தாலும் அதை ( லாஜிக்கை )எழுப்பி விட்ட   காட்சி என்றால் அது கிளைமாக்ஸ் இல் வரும் சண்டை காட்சி தான். தொழில் முறை தாதாவாக இருக்கும் ஒருவரையும் அவருடைய அடியாள்களையும் அசாதாரணமாக கொலை செய்யும் வில்லன்கள், ஏனோ ஹீரோவிடம் அநியாத்துக்கு அடி வாங்கி சாகிறார்கள். இதை தவிர மத்தபடி எனக்கு எந்த பெரிய ஓட்டையும் என்னோட கண்ணுக்கு தெரியவில்லை.

ஒரு வேலை உங்களுக்கு நேரம் இருந்தால் இந்த படத்தை போயி பாருங்க... மத்த படி வேற ஒண்ணும் பெரிய விஸேஷம் இல்லை படத்தில்.

Tuesday, July 13, 2010

சென்னையில் விரைவில் மிதிவண்டிக்கு தனி வழி

சென்னையில் மிதிவண்டிகளுக்கு என்று தனியே பிரத்யேக பாதை அமைக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதற்க்கு சோதனை அடிப்படையில் முதலில் இந்த திட்டம் அண்ணா நகர் பகுதியில் செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது.

bike02

வாகன நெரிசல் மிகுந்த சென்னை மாநகரத்தில் இரண்டு சக்கர மோட்டார் வாகனங்களுக்கே இங்கு வழி இல்லாது இருக்கும் போது, மிதிவண்டி ஓட்டுனர்களின் பாடு சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதிலும் நமது ஆட்டோ ஓட்டுனர்களின் அத்கலத்தால் பாதி விபத்துகள் நிகழ்வாதாக பலர் சொல்வதுண்டு. இந்நிலையில் மிதிவண்டி ஓட்டுனர்களுக்கு என்று தனி பாதை அமைப்பது என மாங்கராசி நிர்வாகம் முடிவு செய்துள்ளது வரவேற்க்க தக்கது.

Saturday, July 10, 2010

இன்டெர்நெட் இணைப்பும் மாசக் கடைசியும்...

ஆனாலும் நம்மா ஆளுங்களுக்கு ரொம்ப தான் லொள்ளு ஜாஸ்தி. ஏதோ சின்ன பசங்க த்ரிஷா பிறந்தநாளுக்கு பேனர் வச்சிருந்தாலும் பரவா இல்லை, 1958இல் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் என்று சொல்லி நடிகை திரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து பேனர் வச்சிருக்காங்க. சிறுசுகளை நாம குத்தம் சொல்றதுக்கு முன்னாடி கொஞ்சம் இதையும் நாம் பார்க்க வேண்டும்

34849_133977886634774_100000676910666_206315_5656851_n

நண்பனின் லொள்ளு

ஒரு வருசத்துக்கு முன்னாடி இந்தியாவுல இருந்தப்போ செலவுக்கு காசு இல்லைன்னு என்னோட நண்பன் கிட்ட போயி "டேய் மச்சி செலவுக்கு கைல காசு இல்ல, ஒரு பத்து ரூவா இருந்த குடேன்" அப்புடீண்ணு கேட்டேன். அதுக்கு என்னை அவன் மொரச்சு பாத்திட்டு தீட்டி இருந்தாலும் பரவா இல்லை. அதை விட கேவலமா ஒண்ணு சொல்லிட்டான். அதை இன்று வரை என்னால் ஜீரணம் செய்ய முடியவில்லை.

India10Rupees

அவன் சொன்னது :- திடீர்ன்னு இவ்வளவு பெரிய அமெளண்ட் கேட்ட நான் எங்கட போவேன்... ( நாயகன் படத்துல வர்ற பின்னணி இசைய நீங்க மனசுல நெனச்சு மருக்கா ஒரு தடவ படிங்க அவன் சொன்னத...)

என்னுடைய அதிமேதாவித்தனம்...

நான் என்னுடைய வீட்டுக்கு அப்பா அம்மாவோட தினமும் ஸ்கைப்-இல் பேசுவது வழக்கம். என் கிட்ட இங்க இருக்குறது 1MBPS கனெக்ஷன், எங்க வீட்ல இருக்குறதோ 256KBPS பிஎஸ்என்எல் கனெக்ஷன், மாசம் 2.5GB அளவு.. இதனால என்னோட வீடியோ அவங்களுக்கு ஓரளவு நல்லா தெரியும், ஆனா அவங்களோட வீடியோ எனக்கு இங்க ரொம்ப மோசமா தெரியும். இதை சரி பன்றதுக்காக அப்பா கிட்ட சொல்லி 1MBPS கனெக்ஷன் வாங்கிக்கொங்க அப்புடீண்ணு சொன்னேன். சரி வங்கிக்கிறேண்ணு சொல்லிட்டு என்கிட்ட வந்து இந்த 1எம்பிபிஎஸ் அப்புறம் 256கேபிபிஎஸ் இதை பத்தி கொஞ்சம் சொல்லு, அப்புறம் இப்போ இந்த 1எம்பிபிஎஸ் கனெக்ஷன் வாங்குறதுனாளா நமக்கு என்ன லாபம்... " அப்புடீண்ணு கேட்டாரு...

images

எங்க அப்பா படிச்சது 5வது வரை தான், இப்போ நான் அவருக்கு புரியுற மாதிரி ஒரு விளக்கம் கொடுக்கணும். அவருக்கு டெக்னிகல் டீடெயில்ஸ் சொன்னா புரியாது. இதை எப்புடி விளக்குறதுண்ணு ஒரே குழப்பம் எனக்கு. டிங்குனு மணி அடிச்சா மாதிரி ஒரு ஐடியா வந்தது.

அப்பா, இப்போ நம்ம வீட்டுக்கு மேல டேங்க் இருக்குதுள்ள, அதோட கொள்ளளவு 20 லிட்டர்ண்ணு வச்சுகொங்க. அதுல இருந்து நாம தண்ணி தினமும் 2 இன்ச் குழாய் மூலமா புடிக்கிறோமா... தண்ணி நமக்கு ரொம்ப மெதுவா வருதுண்ணு சொல்லி நாம இப்போ அந்த 2 இன்ச் குழாயை 4இன்ச் குழாயாக மாத்தூனா தன்னியோட வேகம் அதிகமா இருக்குமுல்ல, அதே வேலையை தான் இங்கயும் பன்றோம். நாம குழாயை தான் மாத்துறோம். ஆனா டேங்கின் கொள்ளளவு அதேன் 20 லிட்டர் தான்.

இப்போ நான் மேல சொன்னதை இங்கே இன்டெர்நெட் கனெக்ஷன்க்கு ஒப்பிட்டால் நாம மாசம் யூஸ் பண்ண வேண்டிய அளவு 2.5ஜிபி அதாவது டேங்க் அளவு. இப்போ அந்த 2.5ஜிபி அளவை நாம 256கேபிபிஎஸ் குழாய் மூலமா புடிச்சிக்கிட்டு இருக்குறோம், அதை மாத்தி தான் நாம இப்போ 1எம்பிபிஎஸ் என்கிற பெரிய குழாய் போட போறோம். தண்ணியும் ( Buffer Speed ) வேகமா வரும் அதே நேரம் நாம முன்னாடி செலுத்துன அதே அளவு தொகையை இதுக்கு செலுத்துனா போதும். அவ்வளவு தான் சிம்பிள். பக்கத்துல என்னோட தங்கச்சி இதை கேட்டுகிட்டு இருந்தா... ஒரு சிரிப்பு சிரிச்சீட்டு போய்ட்டா...

இன்னைக்கு இத்தோட போதுமுன்னு நெனைக்குறேன். நெக்ஸ்ட் மீட் பன்றேன்...

Friday, July 9, 2010

கொழும்பு ஐ நா அலுவலகம் மூடல்

இலங்கை தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்திய இன அழிப்பு போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மாண்டது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் விடுதலைப்ப் புலிகளை அளிக்கின்ற சாக்கில் இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகளில் அப்பட்டமான மனித உரிமை மீறல் இருப்பதை சர்வதேச சமூகம் ( இந்தியா தவிர ) ஐ நா விடம் புகாரக அளித்தது. இந்த புகாரை விசாரிக்கும் பொருட்டு ஐ நா பொது செயலாளர் திரு பான் கீ மூன் அவர்கள் மூவர் அடங்கிய விசாரணை குழு ஒன்றை அமைத்து உள்ளார்.

இந்த விசாரணை குழு தனது விசாரணையை துவக்கும் முன்னே இதை தடுக்கும் நோக்கத்துடன் இலங்கை அரசு தனது உள் வேலைகளை ஆரம்பித்து விட்டது. ஆளும் கட்சியின் அமைச்சர் பதவியில் இருக்கும் ஒரு நபரே ஐ நாவை எதிர்த்து போராடும் பணியில் இறங்கியுள்ளார்..

எங்கே தான் செய்த தவறுகள் வெளியில் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் இலங்கை அரசு மேற்கொள்ளும் இந்த செயல்களானது தனக்கு தானே வைத்துக் கொள்ளும் ஆப்பாக மாறி இருக்கிறது இப்பொழுது. போர் குற்றங்கள் உண்மையிலையே நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்று இதற்க்கு முன் மறுத்த நாடுகளுக்கும் ஒத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திருக்கு இந்த செயலால் தள்ளப்பட்டு உள்ளன.

இதை தொடர்ந்து கொழும்பில் உள்ள ஐ நா அலுவலகத்தின் பாதுகாப்பிற்க்கு இலங்கை அரசாங்கமே பொறுப்பு எடுத்துக் கொள்ளாத நிலையில் அதை மூடுவதே சிறந்தது என்று திரு பான் கீ மூன் முடிவு செய்து விட்டார். இதன் மூலம் இந்த பிரச்சினை சர்வதேச சமூகத்தின் கவனத்தைப் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

Friday, June 4, 2010

சாளரம்: ஹலோ.. ஹலோ (கார்க்கி)

சாளரம்: ஹலோ.. ஹலோ (கார்க்கி)

Wednesday, June 2, 2010

ராகதேவன் இளையராஜா

இன்று பிறந்த நாள் காணும் ராகதேவன் இளையராஜாவுக்கு தமிழகமே வாழ்த்து தெரிவிக்கும் போது அதில் நானும் பங்கு கொள்கிறேன் இந்த பதிவின் மூலம்.
அவர் இசை அமைத்த அனைத்து பாடல்களுமே எனக்குப் பிடிக்கும். அதில் எனக்கு மிக மிக பிடித்த பாடல்களை இதில் சேர்த்து உள்ளேன். பாத்து என்ஜாய் பண்ணுங்க மக்களே.

Sunday, May 30, 2010

மலரும் நினைவுகள் - இலங்கை வானொலி

வணக்கம்...

ஒரு காலத்தில், அதாவது 90 ஆரம்பம் 95களில் தமிழ் திரைப்பட பாடல்களை கேட்பது என்பது குதிரை கொம்பாக இருந்தது. ஒன்று நாம் ஆடியோ காசட் பணம் கொடுத்து வாங்க வேண்டும், இல்லை என்றால் ஏதாவது ஒரு வானொலி நிலையத்தில் பாடல்களி ஒலிபரப்பும் போது கேட்டுக் கொள்ள வேண்டும்.

Saturday, May 29, 2010

சுறா - லேட் விமர்சனம்

என்னடா படம் வந்து ஒரு மாசாத்துக்கும் மேல ஆச்சே. இப்போ விமர்சனம் போடுறானெண்ணு பாக்கதீங்க....
பதிவுலகில் நம்ம ஆளுங்க குடுத்த விம்ர்சாணங்களா படிச்சிட்டு மெதுவா ஓசியில முடிஞ்ச பாத்துக்லாம்னு விட்டுட்டேன். நேத்து தான் இந்த காவியத்தை காணும் பாக்கியம் பெற்றேன். தன்யன் ஆனேன்.

Wednesday, May 26, 2010

கனவுகள்

வணக்கம் நண்பர்களே...
நான் சிறு வயதில் கொண்டு இருந்த சின்ன சின்ன கனவுகளை இங்கு வரிசைப்படுத்த ஆசை படுகிறேன்.
வாழ்வில் எல்லாருக்கும் அவர்களின் அறியா பருவத்தில் எண்ணற்ற கனவுகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இதை யாரும் மறுப்பதர்க்கு இல்லை. இருந்தாலும் அதில ஒரு நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதை இங்கு நான் சொல்ல போவது இல்லை.


Wednesday, May 12, 2010

குழல் இனிது யாழ் இனிது

வணக்கம் நண்பர்களே,

இன்று நான் பார்த்து மகிழ்ந்த ஒரு காணொளி காட்சியை தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

"குழல் இனிது யாழ் இனிது என்பார்" மழலையர் சொல் கேளாதார் என்று ஒரு வாக்கு உண்டு. அதை நிரூபிக்கிறது இந்த வீடியோ காட்சி. கண்டு ரசியுங்கள்.

கூகிள் மாப்ஸ் இப்பொழுது 3டியில்...

அனைவருக்கும் வணக்கம்...

இன்று நான் கூகிள் அகப்பக்கத்தை திறந்த பொழுது தான் கூகிள் ஆனது தன்னுடய மாப்ஸ் சேவையை இன்று முதல் ( ?! ) 3டியில் கொடுக்கும் விஷயத்தை கவனித்தேன். அதன் பக்கவாட்டில் அதனை எப்படி உபயோகிப்பது என்ற காணொளியயும் இணைத்துள்ளது.

Thursday, February 11, 2010

கடவுளும் கம்ப்யூட்டரும் - கவிதை

கடவுள் என்பவர் டொமைன் சர்வர்
நான் ஆனேன் அவனுக்கு கிளையண்ட் பிசி
வாரம் தோறும் செல்கிறேன் பாச் அப்டேட் செய்ய கோவிலுக்கு
போலி சாமியார் வைத்து விட்டான் பக் எனக்கு...

கடவுள்  என்பவர் டொமைன் சர்வர்
மதம் என்பது புரோட்டோக்கால்
சாமியார் ஆனான் ரௌட்டர்
நான் செய்தேன் இதை ட்விட்டர்






 

Monday, February 8, 2010

அசல் - என் பார்வையில்...



படம் டிரைலர் எல்லாம் சூப்பரா இருந்துது. அஜித் நடை உடை எல்லாம் நல்லா இருந்தது. அப்பறம்  டொட்டோடைங்க் பாட்டும் நல்லா இருந்தது. எல்லாத்தையும்  சேர்த்து ஒரு எதிர்பார்போட போனேன் படத்துக்கு. என்னுடைய எதிர் பார்ப்பு நிறைவேறியதா என்றால்


Friday, January 29, 2010

கூகிள் டாக்ஸ்

நான் இது வரை ஒரு வருடத்திருக்கும் மேலாக கூகிள் டாக்ஸ் உபயோகித்து வருகின்றேன். அதில் இருக்கும் சில நிறை மற்றும் குறைகளை இங்கு வகைப்படுத்த விரும்புகின்றேன்.



பொதுவாக நான் அறிந்த வரையில் இந்த சேவையை முதன் முதலில் ஆரம்பித்தது கூகிள் என்று தான் நினைக்கிறேன். பின்னர் zoho போன்ற தளங்கள் போல் நிறைய தளங்கள் இப்பொழு
து இந்த சேவையை வழங்குகின்றன. சரி விசயத்திருக்கு செல்வோம்.

Monday, January 18, 2010

ஆயிரத்தில் ஒருவன்

டிஸ்கி :- இது ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் அல்ல. விமர்சனம் பண்ற அளவுக்கு எல்லாம் நான் ஒன்னும் பெரிய ஆள் கிடையாது. இது என்னுடைய பார்வை இந்த திரை படத்தை பற்றி.


நேத்து தான் ( ஞாயிறு ) போய் இந்த படத்த நண்பர் ஒருவருடன் காண கிடைத்தது. படம் ஆரம்பத்தில் இருந்து கொஞ்சம் தொய்வாக போய்கொண்டு இருந்தாலும் ஒரு 20 நிமிடதிருக்கு பிறகு ஓரளவுக்கு நிமிர்ந்து உக்கார செய்கின்றார் இயக்குனர்.

Friday, January 15, 2010

நாங்களும் கவிதை எழுதுவோம்ல


தனிமை


கண்ணீரை துடைக்க யாரும் இல்லை
இரு கைகளால் துடைத்து கொள்கின்றது

மழையில் நான்கு சக்கர வாகனம்