Sunday, May 30, 2010

மலரும் நினைவுகள் - இலங்கை வானொலி

வணக்கம்...

ஒரு காலத்தில், அதாவது 90 ஆரம்பம் 95களில் தமிழ் திரைப்பட பாடல்களை கேட்பது என்பது குதிரை கொம்பாக இருந்தது. ஒன்று நாம் ஆடியோ காசட் பணம் கொடுத்து வாங்க வேண்டும், இல்லை என்றால் ஏதாவது ஒரு வானொலி நிலையத்தில் பாடல்களி ஒலிபரப்பும் போது கேட்டுக் கொள்ள வேண்டும்.


முன்பெல்லாம் பாடல்களை கேட்பதற்க்கு  நான் பெரிதும் நம்பி இருந்தது இலங்கை வானொலியைத் தான். இதில் ஒரு நாளுக்கு ஒரு முறை தமிழ் பாடல்களை 30 நிமிடத்திருக்கு ஒலிபரப்புவார்கள். அதனுடைய சேவை பெயர் என்ன என்று எனக்கு ஞாபகம் இல்லை. அதிலும் மூன்று தமிழ் பாடல்களே ஒலிபரப்பாகும். பிறகு மறுபடியும் சிங்கள பாடல்கள் வந்து விடும்.

இந்த காலத்தில் எல்லாருடைய வீட்டிலும் என்று சொல்ல முடியாது, ஒரு குறிப்பிட்ட வீட்டில் மட்டும் தான் AM ரேடியோ வைத்து இருப்பார்கள். அதில் குறிப்பாக திருச்சி வானொலி நிலையத்தில் இருந்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை கேட்பார்கள். தினமும் இரவு 08.30 செய்திகள் முடிந்து 08.45 தொடக்கம் 09.00 மணி வரை 3 பாடல்கள் ஒலிபரப்புவார்கள்.

திருச்சி மற்றும் இதர AM வானொலியின் மீது நாட்டம் போகாததற்க்கு காரணம் அதனுடைய ஒலிபரப்பின் இருக்கும் தெளிவு தான். AM ரேடியோவின் பாடல் தரம் என்ன என்று நிறைய பேருக்கு தெரியும் என்று நினைக்கிறேன். இந்த நேரத்தில் கிடைத்த வரப்ப்ரசாதம் தான் இந்த இலங்கை வானொலி.

இதில் முதல் முறையாக தமிழ் பாடல்களுக்கென்று இருந்த 30 நிமிட நேரம் நீட்டிக்கபட்டு 2 மணி நேரமாக மாற்றப் பட்டது. இந்த நேரத்தில் என்னுடைய அப்பா அம்மாவுடனான பெருத்த சண்டைக்குப் பின் ஆண்டேனா மற்றும் எஃப்எம் ரேடியோவை வாங்கினார். இரண்டும் சேர்த்து மொத்த விலை 3000 ரூபாய் தாண்டும்.

பிறகு சிறிது காலம் கழித்து 2 மணி நேர சேவையானது 15 மணி நேர சேவையாக காலை 5 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை மாற்றப்பட்டது. வானொலி சேவையின் பெயர் தென்றல் FM என்று நினைக்குறேன். இந்த சேவை தொடங்கப்பட்ட சில காலத்தில் இலங்கையில் தனியார் FM சேவைகளுக்கு அரசாங்கம் அனுமதி அளித்து வந்தது தான் சக்தி FM. பிறகு சூரியன் FM ( இது நம்ம கலாநிதி மாறனுடைய  சூரியன் இல்லை. இது இலங்கை சூரியன். நம்ம சூரியன் வருவதற்க்கு  முன்னாடியே வந்த சூரியன் ) வந்தது.

இந்த கால கட்டத்தில் பாடல் சேவைகள் எங்களுக்கு நல்ல படியே கிடைத்தது. சிறிது காலம் சென்று வந்தது சன் டிவி முதல் கேபில் தொலைக்காட்சி. பிறகு பாடல் வானொலியில் கேட்கும் பழக்கம் குறைந்து இப்பொழுது மீண்டும் தனியார் வானொலிகளின் புண்ணியத்தால் அதிகமாகி உள்ளது.

அந்த காலத்தில் நேயர் விருப்பத்திற்க்கு கடிதம் எழுதி விட்டு நம்முடைய பாடல் ஒலிபரப்பப்படாத என்று ஏங்கிய காலம் போய், இன்று யுட்யூப்பின் புண்ணியத்தால் நினைத்த பாடல் நினைத்த நேரத்தில் வீடியோ காட்சிகளாகவே காணக் கிடைக்கின்றது.

ஏதோ ஒன்று எழுத வந்து ஏதோ ஒண்ணு எழுதிட்டு இருக்குறேன். சரி இது வரை எழுதுனதே பெரிய விஷயம்.

நன்றி, மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

6 comments:

jeya said...

சக்தி fm க்கு முதலே வந்தது தான் நம்ம சூரியன்
தென்றல் fm இன் பரிச்சார்த்த ஒலிபரப்பு வானவில் fm என்று நினைகிறேன்

Sathya Bharthi said...

எனக்குத் தெரிந்து முதலில் வந்தது தென்றல் அப்புறம் சக்தி பிறகு தான் சூரியன்... தப்பிருந்தால் திருத்தவும். தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.

வாய்ப்பாடி குமார் said...

வானொலி என்றாலே இலங்கைதான் என்பது அந்தக்காலத்தில் . அதுவும் பாட்டுக்குப் பாட்டு, திரைச்சித்திரம், நேயர் விருப்பம், கதையும் பாடலும், என பல நிகழ்ச்சிகள். இடையிடையே புலிகளின் வானொலிகள் எனப் பலப் பல வானொலிகள். அனைத்தையும் சார்ட் வேவ்வில் இருந்து எப்.எம்முக்கு மாறிய பிறகு நமக்கு கிடைக்கவில்லை. இதே காலகட்டத்தில் நாம் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா,என பல நாடுகளின் வானொலிகளையும் கேட்டதுண்டு. ஆனால் அனைத்தையும் தூக்கிச் சாப்பிட்டது நம்ம ஊரு கோடை எப்.எம்.

Sathya Bharthi said...

இன்னும் இலங்கை வானொலி எங்கள் ஊரில் கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது குமார்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Vigneswaran Gobinath said...

முதல் தனியார் வானொலி "முதல்வன்" சூரியனும் அல்ல "முதல் தர" வானொலி சக்தி உம் அல்ல

சுவர்ண ஒலி என்று நினைக்கிறன்
அதன் பின்னரே சூரியன் மற்றையவை பின்னரும் தொடங்கப்பட்டது
எது எப்படி இருப்பினும்
கே எஸ் ராஜாவின் திரை விருந்து போல் வருமா ????

Vigneswaran Gobinath said...

முதல் தனியார் வானொலி "முதல்வன்" சூரியனும் அல்ல "முதல் தர" வானொலி சக்தி உம் அல்ல

சுவர்ண ஒலி என்று நினைக்கிறன்
அதன் பின்னரே சூரியன் மற்றையவை பின்னரும் தொடங்கப்பட்டது
எது எப்படி இருப்பினும்
கே எஸ் ராஜாவின் திரை விருந்து போல் வருமா