Friday, July 9, 2010

கொழும்பு ஐ நா அலுவலகம் மூடல்

இலங்கை தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்திய இன அழிப்பு போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மாண்டது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் விடுதலைப்ப் புலிகளை அளிக்கின்ற சாக்கில் இலங்கை மேற்கொண்ட நடவடிக்கைகளில் அப்பட்டமான மனித உரிமை மீறல் இருப்பதை சர்வதேச சமூகம் ( இந்தியா தவிர ) ஐ நா விடம் புகாரக அளித்தது. இந்த புகாரை விசாரிக்கும் பொருட்டு ஐ நா பொது செயலாளர் திரு பான் கீ மூன் அவர்கள் மூவர் அடங்கிய விசாரணை குழு ஒன்றை அமைத்து உள்ளார்.

இந்த விசாரணை குழு தனது விசாரணையை துவக்கும் முன்னே இதை தடுக்கும் நோக்கத்துடன் இலங்கை அரசு தனது உள் வேலைகளை ஆரம்பித்து விட்டது. ஆளும் கட்சியின் அமைச்சர் பதவியில் இருக்கும் ஒரு நபரே ஐ நாவை எதிர்த்து போராடும் பணியில் இறங்கியுள்ளார்..

எங்கே தான் செய்த தவறுகள் வெளியில் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் இலங்கை அரசு மேற்கொள்ளும் இந்த செயல்களானது தனக்கு தானே வைத்துக் கொள்ளும் ஆப்பாக மாறி இருக்கிறது இப்பொழுது. போர் குற்றங்கள் உண்மையிலையே நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்று இதற்க்கு முன் மறுத்த நாடுகளுக்கும் ஒத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திருக்கு இந்த செயலால் தள்ளப்பட்டு உள்ளன.

இதை தொடர்ந்து கொழும்பில் உள்ள ஐ நா அலுவலகத்தின் பாதுகாப்பிற்க்கு இலங்கை அரசாங்கமே பொறுப்பு எடுத்துக் கொள்ளாத நிலையில் அதை மூடுவதே சிறந்தது என்று திரு பான் கீ மூன் முடிவு செய்து விட்டார். இதன் மூலம் இந்த பிரச்சினை சர்வதேச சமூகத்தின் கவனத்தைப் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: