Thursday, December 17, 2009

சுடோகு

ராத்திரி தூங்குனா தூக்கத்துல பல பல பலான கனவுகள் வருதா உங்களுக்கு...

தூக்கத்துக்கு நடுவுல கண்ட கனவால பயந்து எந்திரிச்ச அனுபவம் இருக்க உங்களுக்கு... ?

Thursday, November 26, 2009

கனவு ( பாகம் 2 )

இந்த மாதிரி எல்லாம் எவனுக்கும் கனவு வராதுன்னு நெனைக்குறேன். இந்த கனவ நெனச்சு நான் நெறைய தடவ பயங்கரமா சிரிச்சது உண்டு. அப்படியாகப்பட்ட கனவ நான் உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ள ஆசை படுகின்றேன்.

இடம் :- சத்யம் திரையரங்கம்
நேரம்:- மாலை கட்சி நேரம்

டிக்கெட் வாங்கிட்டு நான் மற்றும் என்னோட நண்பர்கள் எல்லாம் உள்ள போய் உக்கார்ரதுக்கு சீட்டதேடிகிட்டு இருக்குறோம். உள்ள போயி பாத்தா எல்லா சீட்டும் புல்லா இருக்குது. எங்க ஊருதியேட்டர்ல தான் ஹவுஸ் புல் ஆனாலும் நிறுத்தாம டிக்கெட் குடுத்துகிட்டு இருப்பானுங்க. இங்கயுமான்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டேன். அப்பறமா அங்க ஓரமா நின்னுகிட்டு இருந்த அந்த தியேட்டர் ஊழியரா கூப்பிட்டு டிக்கெட்ட செக் பண்ணிக்கலாமேன்னு அவன்கிட்ட போனா அவன் உங்க இருக்கை மேல இருக்குது பாருங்கன்னு சொன்னான். என்னதுன்னு உள்ள போய் பத்த அங்க சீட் எல்லாம் மேல அந்தரத்துல தொங்கிகிட்டு இருக்குது.
( அந்தரத்துல அப்புடீன்னா இந்த திருவிழாவுல ராட்டினத்துல குதிரை அப்பறம் யானை இன்ன பிற வகையறா எல்லாம் சங்க்ளியில கட்டி வச்சிருபான்களே அந்த மாதிரி தொங்கிகிட்டு இருந்தது. ) அந்த சீட்டுல ஏறி உக்கார்ரதுக்கு எதுவாக ஒவ்வொரு இருக்கைக்கும் ஒரு சங்கிலி மேல இருந்து தொங்கிகிட்டு இருக்கும். நீங்க அத புடிச்சிகிட்டு ஏறனும். என்னடா இது சத்யம் தியேட்டர்ல இப்புடி எல்லாம் பண்ண ஆரம்பிசுடாங்கலேன்னு நொந்து போயி சீட் மாத்த முடியுமான்னு அந்த ஊழியர் கிட்டே கேட்டேன். அவரும் செக் பண்ணி பாக்குறேன்னு சொல்லிட்டு அதே மாதிரி கீழ சீட்டும் வாங்கி தந்தாரு. என்னோட டிக்கெட் மாத்தி எடுத்துட்டு போனவன் அந்த சீட்டுக்கு எப்புடி போறான்னு பாத்துகிட்டே இருந்தேன்.

அந்த அந்தரத்துல தொங்கிகிட்டு இருக்குற இருக்கைகேல்லாம் ஒரு தனி திரையே இருக்குது. அதவும் மேல இருந்து சங்கிலி கட்டி தொங்கிகிட்டு இருக்குது. அதுலயும் இதே படம் தான் போடுவாங்கன்னு சொல்லிட்டான் அந்த திரையரங்க ஊழியர். சரின்னு சொல்லிட்டு படம் பக்க உக்காந்தாச்சு. எல்லா விளக்கையும் அணைச்சு கும் இருட்டு. படமும் போட்டானுங்க.

அப்போ தான் அந்த சம்பவன் நடந்தது. என்னோட இருக்கை பாத்தீங்கன்னா அரங்கதோட நடுவுல இருக்குது. சோ முன்னாடி இருக்குற கேட் வழிய யாரு வந்தாலும் பாத்துரலாம். திடீர்ன்னு ரெண்டு மர்ம ஆசாமிகள் உள்ள நுழைந்தார்கள். இவங்கள நான் மர்ம ஆசாமிகள் என்று சொல்வதற்கு காரணம் என்னான்னா ரெண்டு பேருமே பிரெண்ட்ஸ் படத்துல ஒரு சீன்ல நம்ம சார்லி விஜயையும் சூர்யாவையும் அடிக்கிறதுக்காக உருட்டு கட்டையோட ஒரு கருப்பு கலர் போர்வை ஒன்னு போத்திகிட்டு போவாரே. அதே கெட்டப்ல தான் அவங்க ரெண்டு பேருமே இருந்தாங்க. என்ன சார்லி கையில உருட்டு கட்டை, இவங்க கையில ஒரு டார்ச் லைட். அவங்க ரெண்டு பேருமே உள்ள நுழைஞ்சதும் மோத சீட்ல இருந்து ஆரம்பிச்சு ஒவ்வொரு வரிசையா எல்லாரோட மூஞ்சியிளையும் டார்ச் லைட் அடிச்சி பாத்துகிட்டே வந்தாங்க. டார்ச் லைட் அடிச்சவன் பக்கதுல இருந்த தன்னோட பாஸ் கிட்ட ஒவ்வொருத்தனா காட்டி, சார் இவனா ? சார் இவனான்னு கேட்டுகிட்டு இருந்தான். சரி ஏதோ போலீஸ் செக்கிங் போலன்னு நானும் படம் பக்க ஆரம்பிச்சேன். ஒரு பத்து நிமிடம் கழித்து ரெண்டு பேருமே என்னோட வரிசைக்கு வந்துட்டாங்க.

சார் இவனா?
இல்ல
சார் இவனா?
இல்ல

என் பக்கத்துலையே வந்துட்டாங்க. என் மூஞ்சியில லைட் அடிச்சதும், சார் இவனான்னு கேக்க, அவரோட வந்தவனும் இவன்தான்யா புடி அவனன்னு ரெண்டு பேருமே என்னோட சட்ட கழுத்த ப்புடிசிடாங்க. எனக்கோ ஒண்ணுமே புரியல.

இந்த நேரத்துல தான் உங்களுக்கு முக்கியமான் ஒரு பிளாஷ் பாக் சொல்லியே ஆகணும். இது கனவில் வந்தது அல்ல. இந்த கனவை உங்களுக்கு புரிய வைக்க சொல்ல படும் துணை கதை.

பிளாஷ் பாக்:- ( சுத்துடா கொசுவத்திய...)
நான் வேலை செய்த பழைய நிறுவனத்தில் Information Security Team ஒன்னு இருக்குது. அதுக்கு ஒரு மேலதிகாரியும் அண்ட் சில துணை அதிகாரிகளும் இருப்பாங்க. இவங்களோட வேலை என்னான்னா எல்லாருக்கும் Information செக்யூரிட்டி இன் முக்கியத்துவத்தை புரிய வைக்கிறது. அதுக்காக வார வாரம் ஆள் புடிச்சு ( கணக்கு காட்டுறதுக்காக ) ஒரு ட்ரைனிங் கிளாஸ் எடுப்பாங்க. இந்த ட்ரைனிங் அட்டென்ட் பண்றதுக்கு எங்க பசங்க அநியாயத்துக்கு பய படுவாங்க. ஏன்னா 100 சதவிகித தூக்கம் உறுதி என்று நம்மவர்களால் நம்ப பட்டதே காரணம். அவரு ட்ரைனிங் எடுக்கும் பொது கூட கொஞ்சம் சத்தமா பேசுனாலே ஒரு இன்ட்ரெஸ்ட் இருக்கும். அவரு என்னடான்னா அவருக்கு மட்டும் தான் கேக்குற மாதிரி கடமைக்கு பேசுவாரு. இதனால இந்த ட்ரைனிங் என்று கேள்வி பட்டாலே எல்லாரும் கஸ்டமர் கிட்ட ஒரு முக்கியமான அப்பயின்ட்மன்ட் இருக்குதுன்னு எஸ்கேப் ஆரதுக்கே பாப்பானுங்க. இந்த கும்பலில் நானும் ஒருவன்.

சோ மீண்டும் டு தி கதை, சீ கனவு...

சார், யாரு நீங்க ? என்னைய எதுக்கு புடிகிறீங்க...?
எதுவா இருந்தாலும் வெளியில வா பேசிக்கலாம்.

சார் யாருன்னு சொல்லுங்க... நீங்க பாட்டுக்கு வந்தீங்க இப்புடி என்னமோ திருடன இழுத்திட்டு போற மாதிரி கூட்டிட்டு போறீங்க ?

"தம்பி, எதுவா இருந்தாலும் வாங்க வெளியில வச்சு பேசிக்கலாம்" என்று ஒரு வழியா வெளியில கூட்டிகிட்டு வந்திட்டாங்க. வெளியில பாத்தா நம்ம பழைய படத்துல அதாவது நடுத்தர வயது சினிமால எல்லாம் கதாநாயகிய கடத்திட்டு போக ஒரு கருப்பு கலர் ஆம்னி வச்சிருபான்களே அந்த் வண்டி நின்னது. நேர போய் கதவ திறந்து என்னைய உள்ள தள்ளி விட்டாங்க. இன்னும் நான் அவங்கள கெஞ்சிகிட்டு தான் இருக்குறேன். " சார், யாருன்னு தான் சொல்ல மாட்டேங்குறீங்க, எங்க கூட்டிகிட்டு போறேன்னாவது சொல்லுங்களேன்". ம்ஹும், அதுக்கும் பதில் இல்ல, ஒருத்தர் கத மூடிடுடு வண்டிய ஒரு சுத்து சுத்தி டிரைவர் சீட்ல உக்காந்தாரு, இன்னொருத்தர் அதுக்கு பக்கத்து சீட்ல உக்காந்துட்டாரு.

ரெண்டு பெரும் உள்ள உக்காந்த உடனே அவங்க மேல போட்டு இருந்த போர்வைய எடுத்தாங்க. இரவு நேரம் என்பதால் அவங்க மூஞ்சி எனக்கு சரியா தெரியல. ரெண்டு பெரும் இப்போ ஒண்ணா இப்போ என்னோட பக்கம் திரும்பி பாத்தாங்க. பாத்தா உடனே நான் அப்புடியே ஷாக் ஆயிட்டேன். அவங்க ரெண்டு பேருமே வேற யாரும் இல்லை. என்னோட டீம் லீட் அண்ட் ப்ராஜெக்ட் மேனேஜர்.

சார் நீங்களா... சார் நீங்களா...
நாங்க தான்... நாங்க தான்...
என்ன சார் நீங்க இப்புடி எல்லாம் பண்றீங்க, என்ன பிரச்சினை ? எதுக்கு என்னைய இப்புடி ஏதோ கடத்திட்டு போற மாதிரி கூட்டிகிட்டு வர்றீங்க.
எல்லாம் விசயமாத்தான்".
இப்பவாவது சொல்லுங்க சார், எங்க கூட்டிகிட்டு போறீங்கன்னு...?
நேர நம்ம இப்போ ஆபீஸ் தான் போறோம்.
எதுக்கு சார்...
எதுவா இருந்தாலும் அங்க வந்து பேசிக்கோ...

நானும் தமிழ் படத்துல வர்ற ஹீரோ மாதிரி என்னைய எதுக்கு போலீஸ் ஸ்டேஷன் கூட்டிகிட்டு போறீங்கன்னு கேட்டுகிட்டே இருக்குறேன். அவங்களும் போலீஸ் மாதிரியே " எதுவா இருந்தாலும் ஸ்டேஷன்ல வந்து பெசிக்கொன்ன்னு சொல்லிகிட்டே இருக்குறாங்க.

இப் சீன் நேர என்னோட ஆபீஸ் மீட்டிங் ரூமுக்கு போகுது. ரெண்டு பெரும் முன்னாடி போறாங்க, நான் இந்த நேரத்துல எதுக்கு என்னைய ஆபீஸ் கூட்டிகிட்டு வந்தாங்கன்னு தெரியாம திரு திருன்னு முழிச்சிக்கிட்டு அவங்க பின்னாடியே போய்கிட்டு இருக்குறேன்.

மீட்டிங் ரூம் வந்தாச்சு, ரெண்டு பெரும் என்னோட ரெண்டு கைய புடிச்சு மீட்டிங் ரூம் கதவ திறந்து என்னைய உள்ள தள்ளி விட்டாங்க. உள்ள பத்த என்னோட பழைய கம்பெனி எம்டி, மேனேஜர், CEO எல்லாரும் உக்காந்து இருக்குறாங்க. கிட்ட தட்ட மீட்டிங் ரூம் புல்லா பெரிய பெரிய ஆளுங்களா உக்காந்து இருக்காங்க. நான் பிளாஷ் பாக்ல சொன்ன அந்த Information Secutiry Chief மொதகொண்டு.

என்னைய உள்ள தள்ளி விட்ட உடனே என்னோட மேனேஜர், அதாவது என்னைய தியேட்டர்ல இருந்து கடத்திகிட்டு வந்தவர் அந்த ஆபிசரை பத்து கண்ணாலேயே பாத்து சொன்னாரு. " நீங்க சொன்ன மாதிரி பையன கூட்டிகிட்டு வந்திருக்கேன், இதுக்கு மேல நீங்க தான் பாத்துக்கொனும். அவரும் கண்ணாலேயே என்கிட்டே அவன விட்டுடு, இனிமே நான் பாத்துகுறேன்னு சொல்லிட்டரு. ( காதலர்கள் தான் கண்ணால பேசுவாங்கன்னு நெனச்சிகிட்டு இருந்தேன். இவங்களுமான்னு நொந்துகிட்டேன் ).போகும் பொது கதவ சாத்திட்டு போன்னு அவரு கண்ணாலேயே சொல்ல இவரும் கண்ணாலேயே ஆகட்டும்னு சொல்லிட்டு கிளம்பிட்டாரு.

எனக்கோ ஒரே பயம். என்ன ஆகா போகுதோ, இது வரை அட்டென்ட் பண்ணாத ட்ரைனிங் எல்லாம் சேத்து இன்னைக்கு மொத்தமா நம்மளோட டவுசெர் உருவ போறாங்கன்னு நெனச்சேன்.

அந்த Information Secutiry Officer இப்போ மெதுவா சேர்ல சாஞ்சு உக்காந்துகிட்டு கைய பின்னாடி கட்டிக்கிட்டு ஒரு கேள்வி கேட்டாரு. அதோட கனவு முடிஞ்சு போச்சு. அவரு கெட்ட கேள்வி இது தான்...

So Mr. Dinesh... What do you think about Information Security in our Company ?

கிளிஞ்சது போன்னு மனசுல நான் நெனச்சிகிட்டு இருக்குறேன்... அப்போ

ரூம்ல இருக்குற எல்லாம் பெரிய மனுசங்களும் என்னோட மூஞ்சிய பத்திக்கிட்டு இருக்குறாங்க, என்னோட பதிலுக்காக... அப்போ என்னோட மூஞ்சி கீழ இருக்குற இந்த குரங்கு மூஞ்சி மாதிரி ஆயிடுச்சு...


சுபம்...

Thursday, October 29, 2009

புது வரவு

              போன வருடம் இதே நாள், நான் என்னோட பழைய அலுவலகத்தில் இரவு பணியில் இருந்த நேரம்.வழக்கமாக இரவில் அணைத்து வேலைகளையும் நாம் முடித்து விட்டால் படுக்க சென்று விடலாம், யாரும் எதுவும் கேட்க மாட்டர்கள். அன்றும் அதே போல் நான் மூணு மணிக்கு படுக்க சென்றேன்.

             திடிரென்று என்னுடைய கைபேசியில் அழைப்பு வந்தது. யாரென்று பார்த்தால் என்னுடைய வீட்டில் இருந்து என் அம்மா என்னை அழைத்தார்கள். வழக்கமாக என்னோட வீட்ல இருந்து போன் பன்றதா இருந்த எனக்கு ஒரு சாயங்காலம் 6  மணிலருந்து 9 மணிக்குள்ள பண்ணி முடிச்சிடுவாங்க. எப்போவாவது ஒரு தடவ அப்பா அவரோட எல்லா வேலையையும் முடிச்சிக்கிட்டு சாவகாசமா ஒரு 12 இல்லன்னா 12.30 க்கு பண்ணுவாரு. அதுவும் 1 மணிக்குள்ள முடிஞ்சுடும். என்னடா இது, இந்த நேரத்துக்கு போன் பண்றாங்களேன்னு யோசிச்சிகிட்டே போன எடுத்தேன்.

நான் : சொல்லுங்கப்பா...
அம்மா : நான் அம்மா பேசுறேன்பா
நான் : சொல்லும்மா, என்ன இந்த நேரத்துல போன் பண்ற, இன்னும் தூங்கலையா...?
அம்மா : தங்கச்சிக்கு  இடுப்பு வலி அதிகமா  ஆயிடுச்சு... ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு வந்திருக்கோம். டாக்டர் பாத்துகிட்டு இருக்காங்க, இத சொல்றதுக்கு தான் போன் பண்ணேன்... ஆமா நீ எங்க ஆபீஸ்லைய இருக்குற...?
நான் : ஆமாம்மா, ஆபீஸ்ல தான் இருக்கேன். இன்னும் இருபது நாள் ஆகும்னு டாக்டர் சொன்னதா நேத்து தான நீ சொன்ன... அதுக்குள்ள எப்புடி...?
அம்மா : எப்பவும் போற மாதிரி அவளை இன்னைக்கும் வாக்கிங் கூட்டிகிட்டு போனேன். வீட்டுக்கு திரும்புற வழியிலேயே இடுப்பு கொஞ்சம் வலிக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னா, நான் தான் கொஞ்ச பொறுத்துக்கோ, எல்லாம் சரி ஆயிடும்னு சொன்னேன். வீட்டுக்கு வந்து ஒரு மணி நேரம் ஆகியும் அப்புடி   தான் இருக்குதுன்னு சொன்னா, அதான்  நேர இங்க கூட்டிகிட்டு வந்துட்டேன், நீ எதுவும் பயப்படாத, நாங்க பாத்துக்குறோம்,
நான்: எந்த ஆஸ்பிடல்ல சேர்த்து  இருக்கீங்க?
அம்மா: நம்ம எப்பவும் காட்ற ஆஸ்பத்திரி தான்...
நான்: சரி எதுனா பிரச்சினைன்னா எனக்கு உடனே போன் பண்ணு, சரியா...
அம்மா: சரிப்பா...

அம்மா போன வச்சதுக்கு அப்பறம் எனக்கு தூக்கமே வரல, என்ன ஆகுமோ எது ஆகுமோன்னு ஒரே பயம்... சரி எதுவா இருந்தாலும் காலைல பாத்துக்கலாம்னு தூங்க போனேன். ஆனா தூங்க முடியல. நெனப்பு பூர அங்கேயே இருந்துச்சு. ஆனா அதுக்கு அப்பறம் எப்போ தூங்குனேன்னு எனக்கே தெரியல...


சரியாய் காலைல ஒரு அஞ்சு மணி இருக்கும் மறுபடியும் எங்க வீட்ல இருந்து போன் பண்ணாங்க... இப்போ மறுபடியும் எங்க அம்மா தான் பேசுனாங்க. " ஹலோ சொல்லும்மா". எங்க அம்மா பேசாம வெறும் அழுதுகிட்டே இருந்தாங்க, எனக்கோ ஒண்ணுமே புரியல, ஒரே கலவரம் ஆயிட்டேன் நான். "என்னம்மா சொல்லும்மா என்ன ஆச்சு," அப்பறம் எங்க அம்மா கிட்ட இருந்து எங்க அத்த போன வாங்கி "உன் தங்கச்சிக்கு பைய்யன் பெறந்துருக்கன், நீ மாமா ஆயிட்ட" அப்புடின்னு சொன்னாங்க. எனக்கோ சந்தோசத்துல என்ன பன்றதுன்னு ஒன்னும் புரியல... அப்பறம் அம்மா ஏன் அழுதுகிட்டு இருகாங்க ன்னு கேட்டேன், அதுக்கு எங்க அத்த "உங்க அம்மாவுக்கு சந்தோசத்துல பேச்சு வரவே மாட்டேன்குது" ன்னு சொன்னாங்க. இந்த சந்தோஷம் பட வேண்டிய விசயத்துக்கு ஏன் போய் அழுதுகிட்டு இருகாங்க? போன அம்மா கிட்ட குடுங்க, நான் பேசுறேன்...
இப்போ அம்மா போன வாங்கிகிடாங்க... " அம்மா, என்ன பிரச்சினை? ஏன் இதுக்கு போய் அழுதிகிட்டு இருக்க... மூணு புள்ள பெத்தவ நீ இப்புடி அழுவலாமா?" ன்னு கேட்டேன்.
அதுக்கு அம்மா " இல்லப்பா, அவளை உள்ள கூட்டிகிட்டு போனதுல இருந்து எனக்கு என்ன பன்றதுன்னே தெரியல... கடைசியில கொழந்த அழுவுற சத்தம் கேட்ட உடனே எனக்கு அழுகையே வந்துச்சு."
" சரி பைய்யன் யாரு மாதிரி இருக்கான்.?
" குழந்தைய குளிப்பாட்டுரதுக்காக நர்ஸ் எடுத்திகிட்டு போய் இருகாங்க,இன்னும் கொழந்தய வெளியில கூட்டிகிட்டு வரல்ல,
" சரி அப்பா என்ன பண்றாரு "
" அப்பா வீட்டுக்கு துணி எடுக்க போய் இருக்குறாரு, வந்த உடனே பேச சொல்றேன்."
" சரி கூட யாரெல்லாம் இருகாங்க?
" பெரிய அத்த, சின்ன அத்த, அவளோட மாமனார், மாமியாரு எல்லாம் இருக்காங்க."
" அப்புடீன்னா ஓகே,"
" சரிப்பா, நான் அப்பறம் பேசுறேன், உள்ள கூப்புடுறாங்க..."

அம்மா இப்போ போன கட் பண்ணிட்டு போய்டாங்க. உடனே என்ன பன்றதுன்னு புரியல.. வாட்ச்ல டைம் பாத்தேன். மணி 05.30.  என் மனசுக்குள்ள, ஊருக்கு போய் பாத்திட்டு வரலாமேன்னு தோணிச்சு. எப்புடி இருந்தாலும் இன்னும் ஒரு 2 நாள்ல அண்ணன் ( சித்தி பைய்யன் ) கல்யாணத்துக்கு போக வேண்டிய வேலை இருக்குது, அதுக்காக நான் 5  நாள் லீவ் ( எந்த ஆபீஸ் லடா அண்ணன் கல்யாணத்துக்கு இவ்வளவு நாள் லீவ் குடுக்குறாங்கன்னு கேக்காதீங்க, அது வேற கத. ) அப்ளை   பண்ணி வச்சிருந்தேன். அப்போ போய் பாதுக்கலாமேன்னு தோணிச்சு.

அப்போ தான் என்னோட வொர்க் பண்ற ஒருத்தரு வந்தாரு. அவர் கிட்ட விசயத்த சொன்னேன். முதல்ல அவரு மாமா ஆனதுக்கு வாழ்த்துக்கள் சொல்லிட்டு, என்ன ஊருக்கு போரியானு கேட்டாரு. இல்ல இன்னும் ரெண்டு நாள்ல என்னோட அண்ணன் கல்யாணம் இருக்குது அப்போ போய் பாக்கலாம்னு இருக்கேன்னு சொன்னேன். " யோவ், போய்யா, மாப்புள்ள வந்திருக்காரு போய் பாத்துட்டு வருவியா?"  குழந்தைக்கு தாய் மாமனே நீ தான், நீ பக்கமா வேற யார் போய் பாப்பாங்க ?. அப்புடீன்னு சொல்லிட்டு போய்ட்டாரு. இவரு இப்புடி சொன்ன உடனே எனக்கு ஒரே குழப்பம். சரி இதுக்கெல்லாம் ஒரு டீ சாப்டா தான் முடிவு எடுக்க முடியும்னு நேர டீ  கடைக்கு போய் உக்காந்தாச்சு.

மீச ஒரு டீய போடு...
என்ன சார், காலிலேயே ரொம்ப சந்தோசமா இருக்கீங்க...
என்னோட தங்கச்சிக்கு பைய்யன் பொரந்திரிக்கு, அதான்...
மீசை தன்னுடைய சார்பாக குழந்தைக்கு வாழ்த்துக்கள சொல்லிட்டாரு.

டீயும் வந்திச்சு. சாப்டு முடிச்சாச்சு. இன்னும் முடிவு வரல.
சரி பேசாமே TL கிட்ட பேசி லீவா ஒரு ரெண்டு நாள் முன்னாடி வாங்கிகிட்டு போய் வந்துடலாம், கல்யாணம் முடிஞ்சு ஒரு ரெண்டு நாள் முன்னாடியே கெளம்பிடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்.

மணி இப்போ 06.15. TL க்கு போன் பண்ணேன். அவரு போன் எடுக்கவே இல்ல. சரி இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு போன் பண்ணிக்கலாம்னு விட்டுட்டேன். மறுபடியும் அவருக்கு போன் பண்ணேன். இப்போ எடுத்தாரு. நிலைமைய அவர் கிட்ட தெளிவா சொல்லி புரிய வைக்குறதுக்குள்ள எனக்கு போதும் போதும்னு ஆயிடுச்சு. ஒரு வழிய அவர ஒத்துக்க  வச்சு பெர்மிசன் வாங்கியாச்சு.

அடுத்து என்ன? ஊருக்கு போகணும், பஸ்ல போன ஊருக்கு போறதுக்குள்ள டவுசர் கிழிஞ்சிடும். அதனால நேர நெட்ல போய் இந்திய ரயில்வேயின் வெப்சைட பாத்தா எல்லா ரயிலும் புல்லா போகுது. இவனுங்க ( ஊருக்கு போற நம்ம மக்கள் ) தீபாவளி முடிஞ்சு கூட அடங்க மாட்டேங்க்ரானுங்கலேன்னு நெனச்சிகிட்டு, சரி ஒரு ஸ்பெஷல் ரயில் இருக்குது அதுல ரிசர்வ் பண்ணாமலே போய்டலாமேன்னு நெனச்சு கெளம்பிட்டேன்.

ரயில் 09.30 க்கு கிளம்புவதாக  வெப்சைட் ல போட்டு இருந்தானுங்க. நேரா எழும்பூர் போய் டிக்கெட் வாங்கிகிட்டு போய் நின்னா, ரயில்ல எவனயுமே காணோம். பெட்டி பூரா காளிய இருக்குது. எனக்கோ டவுட்டு. என்னடா, இது தான் நம்ம போக வேண்டிய ரயிலான்னு? பக்கத்துல ஒருத்தரு இருந்தாரு, அவர் கிட்ட கேட்டதுக்கு, தம்பி நானும் அது தெரியாம தான் இங்க நிக்கிறேன்ன்னு சொன்னாரு. சரி வேற எவன் அந்த வழிய வர்றன்னு பாத்துகிட்டே இருந்தேன். சரியா நம்ம TTR வந்தாரு, அவர் கிட்ட கேட்டா இது தான் அந்த ஸ்பெஷல் ரயில்ன்னு  சொன்னாரு. சரின்னு ஏறி உக்காந்தாச்சு.

போறான் போறான் போய்கிட்டே இருக்குறான். இதோ தாம்பரம் போறதுக்குள்ள ஒரு மணி நேரம் ஆயிடுச்சு. என்னோட பெட்டியில என்னையையும் இன்னொருத்தன தவிரவும் வேற யாருமே இல்ல. எனக்கு மறுபடியும் டவுட்டு. இந்த ரயில் மதுரைக்கு தான் போகுதான்னு.  அப்பா தான் தாம்பரத்துல  ஒரு நாலு ஐந்து பேரு என்னோட பெட்டியில ஏறுனாங்க. அப்போ தான் கன்பார்ம்  ஆச்சு, இது மதுரை போற ரயில் தான்னு. மணி 11 ஆயிடுச்சு இங்கயே. இவன் என்னைக்கு மதுரை போவான்னு தெரியலயேன்னு மனசுக்குலையே நெனச்சிகிட்டு இருந்தேன்.

ஒரு வழிய மதுரைக்கு 8 மணிக்கு வந்து சேந்தாச்சு. இப்போ மதுரைல இருந்து எங்க ஊருக்கு பஸ்சு புடிக்கணும். அதுக்கு பெரியார்ல இருந்து மாட்டு தாவணி போய் அங்க இருந்து போகணும். இப்புடி ஊர் போய் சேர்றதுக்குள்ள மணி 09.30pm.

வீட்டுக்கு போய் துணி மாத்திகிட்டு ( வேற என்ன, நம்ம பாரம்பரிய உடை கைலி தான் )  ஹாஸ்பிடல்  போயி பய்யன பாத்துக்கு அப்பறம் தான் எனக்கு அப்பாடான்னு இருந்துச்சு.

எனக்கு ஒரு கெட்ட  பழக்கம் சின்ன வயசுல இருந்து இருக்குது. எப்போ சின்ன பசங்கள பாக்க போனாலும், போன உடனே மொதல்ல செய்யுற வேலை, பசங்களோட கை மற்றும் கால் விரல எண்ணி பாக்குறது. இப்போவும் அதா தான் பண்ணேன். தொட்ட உடனே மாப்பிள்ள டென்ஷன் ஆயிட்டாரு. அப்புடி ஒரு அழுக. ஹாஸ்பிடல்ல  இருந்த என்னோட அம்மாவும் அத்தையும் என்னைய அடிக்க வர மீ தி எஸ்கேப்...
இன்று அவன் முதல் பிறந்த நாள். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.