Tuesday, July 13, 2010

சென்னையில் விரைவில் மிதிவண்டிக்கு தனி வழி

சென்னையில் மிதிவண்டிகளுக்கு என்று தனியே பிரத்யேக பாதை அமைக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதற்க்கு சோதனை அடிப்படையில் முதலில் இந்த திட்டம் அண்ணா நகர் பகுதியில் செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது.

bike02

வாகன நெரிசல் மிகுந்த சென்னை மாநகரத்தில் இரண்டு சக்கர மோட்டார் வாகனங்களுக்கே இங்கு வழி இல்லாது இருக்கும் போது, மிதிவண்டி ஓட்டுனர்களின் பாடு சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதிலும் நமது ஆட்டோ ஓட்டுனர்களின் அத்கலத்தால் பாதி விபத்துகள் நிகழ்வாதாக பலர் சொல்வதுண்டு. இந்நிலையில் மிதிவண்டி ஓட்டுனர்களுக்கு என்று தனி பாதை அமைப்பது என மாங்கராசி நிர்வாகம் முடிவு செய்துள்ளது வரவேற்க்க தக்கது.

2 comments:

ராம்ஜி_யாஹூ said...

மேற்கத்திய நாடுகளில் கடற்கரை ஓரங்களில் மிதி வண்டிகளுக்கு தனி பாதை உள்ளது, அதை போல இருக்கும் போல.

பார்ப்பதற்கு ஆசையாக இருக்கிறது

உங்கள் பெயர் வித்தியாசமாக இருக்கிறது, தனுஷு ராசி, பெயர்க் காரணம் என்ன

DR said...

எனக்கும் ஆசை நீங்க சொன்னது நிஜமாகும் என்று.

பெயர் வித்தியாசம் எல்லாம் கெடையாதுங்க... என்னோட ராசி அது...

பிளாக் எழுதனும்னாலே எதுனா ஒரு பூனை பெயர் வைத்து தான் எழுத வேண்டும் என்று ஒரு எழுத படாத விதி உண்டு. Writer ****** அப்புடீண்ணு என்னோட பேரு போட ஆசை தான். இருந்தாலும் நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லாததுனால என்னோட ராசியையே புனைபெயர் ஆக்கிட்டேன்...