Wednesday, December 29, 2010

மன்மதன் அம்பு

கடைசியா நானும் இந்த படத்தை பாத்துட்டேன். நான் பண்ணின ஒரே தப்பு பஞ்சதந்திரம், பம்மல் உவ்வே சம்பந்தம் மற்றும் தெனாலி அளவுக்கு எதிர்பாத்தது தான்.பம்மலைத் தவிர்த்து மீதி இரண்டும் கமல் மற்றும் ரவிக்குமார் ஜோடி கலக்கி இருந்தார்கள். இதில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறார்களா என்றால் கசப்புடன் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 

கதை இந்நேரம் நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியணும்னு அவசியம் இல்லை. பாதி வலைப்பதிவர்கள் கிழித்து தொங்கப்போட்டு இருப்பார்கள். இருந்தாலும் விட்ற மாதிரி இல்லை நான். நல்ல டைமிங்கோட ஒரு ரைஹ்மிங்கோட சொல்றேன் கேளுங்க... ( வசன உதவி அநேகமாக சிங்கமுத்து-தலைநகரம் படத்திலிருந்து ) 

Madhavan and Kamal Hassan
ஓய்வு பெற்ற ராணுவ தளபதி கமல்,  தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரின் புற்று நோய் சிகிச்சைக்காக பணம் ஈட்டும் பொருட்டு தொழிலதிபர் மாதவன் சொல்லும் ஒரு உளவாளி வேலைக்கு ஒத்துக்கொள்கிறார். தான் காதலிக்கும் திரைப்பட நடிகையின் பழக்க வழக்கங்களின் மேல் சந்தேகம் கொள்ளும் மாதவன், அதை உறுதிப்படுத்தி கொள்வதர்க்காக கமலை அனுப்புகிறார். ஆரம்பத்தில் இருந்தே கொடுத்த வேலையை செவ்வனே செய்யும் கமல், திரிஷா ஒரு "நல்ல பெண்" என்று மாதவானிடம் சான்றிதழ் வழங்குகிறார். 

Kamal Hassan and Trisha
தான் நம்பிய விஷயம் ( திரிஷாவுக்கு வேறு ஒருவருடன் கள்ள உறவு ) மற்றவர்கள் பொய் என்று சொல்வதை ஏற்கின்ற மனமில்லாத மாதவன் "நல்லவளை நல்லவள் என்று சொல்வதற்க்கு உனக்கு எதுக்கு கூலி" என்று நினைத்து, கமலுக்கு பேசிய பணத்தை கொடுக்க மறுத்து நாடு திரும்பும்படி கூறுகின்றார். மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நண்பனை காக்க இந்த பணம் அவசியம் என்பதால், தான் வேலை முடித்து விமான நிலையத்துக்கு திரும்பும் பாதையில் த்ரிஷாவை வேறு ஒருவருடன் பார்த்ததாக பொய்யுறைக்கும் கமல், தன் பணம் கிடைக்கும் வரை இந்த பொய்யை தொடர முடிவு செய்து... அதன் பிரதி பலன்களே மீதி... 

இதன் நடுவில் த்ரிஷா தான் எதிர்பாக்கும் அத்தனை புருஷலட்சணமும் கமலிடம் இருப்பதாக நம்பி அவரை காதலிக்க தொடங்க... மாதவனின் காதல் பப்படம் ஆகிறது. அதை சரிக்கட்ட இன்னொரு கேரக்டர் இருக்கின்றது படத்தில்... முடிஞ்சா நீங்களே கண்டுபுடிங்க... நடுவில் கமலுக்கென்று ஒரு ஃபிளாஷ்பேக். அது வெறும் ஒரு பாட்டுக்கும், கமல் மீதான த்ரிஷாவின் காதலுக்கும் சற்று உரம் சேர்க்கும் படி அமைந்திருக்கின்றது. 

Madhavan, Kamal Hassan and Trisha
என்னடா இவ்வளவு கதை சொன்னவன் முக்கியமான விஷயத்தை சொல்லாமலே போய்ட்டானேன்னு பாக்குறீங்களா... அது மட்டுமாவது இனிமே இந்த விமர்சனம் படிச்சிட்டு போறவங்களுக்கு ஒரு சர்ப்ரைஸாக இருக்கட்டுமே என்று நிர்வாகம் முடிவு செய்துள்ளது. உங்களுக்கு நேரம் இருந்து படம் பார்ப்பதற்க்கு ஒரு நல்ல துணை (ஃபிரண்ட்ஸ்-ன்னு கூட வச்சிக்கலாம்) இருந்து, காசும் கையில இருந்தால் தாராளமாக இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம். 

பின் குறிப்பு :- பஞ்ச தந்திரம் மற்றும் பம்மல் முதன் முறை திரை அரங்கிர்க்கு சென்று பார்த்தபோது சரியாக அதிலுள்ள காமெடி-கள் புரியாமல் போனதால் என்னால் அவ்வளவு ஆழமாக ரசிக்க முடியவில்லை. ஆனால் அதற்க்கு அப்பறம் ரொம்ப புடிச்சு போனது வேற விஷயம். ஆனா இதில் அதற்கான முகாந்திரம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒரு வேலை கிரேஸி மோகனுக்கு மட்டுமே வாய்த்த வாய்ப்பாக இருக்கலாம். 

Saturday, December 4, 2010

சிக்கு புக்கு - டயர் பஞ்சர் ஆயிடுச்சு

    ஆர்யாவை நம்பி படத்துக்கு போனதுக்கு எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்... படம் ஆரம்பித்து ஒரு மணி நேரம் உள்ளே இருந்தாலே பெரிய விஷயம். சரி பாத்தாச்சு, அப்புடியே விமர்சனம் போட்டுடலாம்னு வந்தேன்... 


ஆர்யா ஷ்ரேயா... லண்டன் வாழ் இளைஞ இளைஞிகள். இவங்க தன்னுடைய சில சொந்த பிரச்சினைகளுக்காக இந்தியா வர, வந்த இடத்தில் பெங்களூர்-ல்இருந்து மதுரை செல்ல வேண்டிய விமானம் ரத்தாக, தரை மார்க்கமாக மதுரை செல்ல முடிவு செய்து புறப்படுகிறார்கள்... இவங்க மதுரை போயி சேருவதர்க்குள் நடைபெறும் காப்ராக்களே, திரைப்படம். 

நடுவில் அப்பா ஆர்யாவினுடைய காதல் டிராக் வேறு தனியாக செல்கின்றது. அந்த கதை ஏன் தான் வருகிறதென்றே தெரியவில்லை. அப்புடி வந்தாலும் கடைசியில் ஒரு ட்விஸ்ட் வச்சாறு பாருங்க டைரடக்கரு... நான் அப்புடியே மெர்சல் ஆயிட்டேன்... அப்பா ஆர்யா கதாபாத்திரம் கிளைமாக்ஸ்-யில் ஒண்ணும் இல்லாத விசயத்துக்காக படம் முழுக்க காட்டப் பட்டது தான் கொடுமை. அதுக்கு பதிலா அந்த கதாபத்திரைத்தே வைத்து ஒரு சுவையான கதையை சொல்லி இருக்கலாம். 


படத்துல வர எல்லா காட்சிகளும் சரியான ஸ்லோ அப்புறம் எளிதில் கணிக்க கூடியதா இருக்குது. அப்புறம் படத்தோட ஒரு பெரிய பலவீனம் பாடல்கள். 

மதராசபட்டினம் மாதிரி பழைய காலத்து கதைன்னு சொன்ன உடனே நம்ம ஆளு சரின்னு சொல்லிட்டாறு போல... 

அண்ணே சந்தானம் பழைய படங்களில் வருவது போல, படத்திற்க்கு சிறிதும் சம்பந்தமே இல்லாத தனி டிராக் காமெடியாக வந்து செல்கின்றார். அதுவும் ஒண்ணும் சிறப்பாக இல்லை. ஒரு வேலை பாஸ் (எ) பாஸ்கரன்-யில் இவருடைய அதீத பங்கினால் தான் படம் வெற்றியடைந்ததால் இதில் வேண்டுமென்றே காட்சிகளை குறைத்து விட்டார்களோ என்னவோ ? யாருன்னு நான் தான் சொல்லி உங்களுக்கு தெரியனுமா ?  ஷ்ரேயா... இந்த அம்மா சந்தோஷ் சுப்ரமணியம் படத்தை நெறைய தடவை பாத்துட்டாங்கன்னு நினைக்குறேன். ஜெனீலியா-வின் அட்டு காப்பியாக படம் முழுவதும் வலம் வருகிறார். 

ஒரு வேளை உங்களுக்கு இந்த படத்தை தியேட்டர் போயி பாக்க முடியலைன்னா, இடைவேளை வரை ஜப் வீ மேட்-ஐயும் அதாங்க கண்டேன் காதலையும், இடைவேளைக்கு அப்புறம் புதுக்கோட்டையிலிருந்து சரவணனும்... கிளைமாக்ஸ்-க்கு குட்டி இல்லைன்னா ஏதாவது ஒரு தமிழ் படத்தையும் பாத்துக்குங்க... 

முடியல... அப்புறமா வர்றேன்... 

டிஸ்கி:- என் நண்பர் Unstoppable இல்லைன்னா ரத்த சரித்திரம் பாக்கலாம்னு சொன்னாரு, நான் தான் அவரை வம்படியா இந்த படத்துக்கு கூட்டிட்டு போனேன். பாதி படத்துலையே என்னை அவரு கெட்ட வார்த்தைல திட்ட ஆரம்பிச்சிட்டாரு. என்னத்த சொல்றது போங்க... 

இந்த காயத்தை ஆற்ற நாளைக்கு ரத்த சரித்திரம்... 

இண்ட்லி மற்றும் தமிழ்மனத்துல ஓட்டு போடுங்க... அது உங்க கடமை... 

Friday, December 3, 2010

IT Jokes - தகவல் தொழில்நுட்ப சுவையான சம்பவங்கள்

பொதுவாக ஒரு அழுவலகத்தில் வேலையில் இருந்தால் கண்டிப்பாக அங்கு பல சுவையான சம்பவங்கள் நடக்கும். அதுவும் இளைஞர்கள் இருக்கும் இடத்தில் இந்த மாதிரியான விசயங்களுக்கு பஞ்சமே இருக்காது. அதுவும் IT துறையில் சொல்லவே தேவை இல்லை. அப்படி நான் பணியாற்றிக் கொண்டு இருந்த எனது முன்னாள் அழுவலகத்தில் நான் சந்தித்த சில சுவாரஸ்யமான விஷயங்கள்...
சம்பவம் 1

Computer Techie
நான் என்னுடைய பழைய அழுவலகத்கில் கணினி பழுது பார்க்கும் ( Desktop Engineer ) வேலையில் இருந்தேன். ஒவ்வொரு பயனாளர்களும் ( End users ) தங்கள் கணினியில் ஏதாவது பிரச்சினைகளை சந்திக்கும் போது எங்களை அழைத்து பிரச்சினைகளை சரி செய்வது வழக்கம். அன்றும் அதே போல் ஒரு துறையின் துணைப் போது மேலாளர் ( Deputy General Manager ) என்னை அழைத்தார்.

இந்த அழுவலகமானது கனரக வாகனங்களை உற்பத்தி செய்யும் அழுவலகம். அதனால் இங்கு இருக்கும் கடைநிலை பயனாளர்களுக்கு கணினியை பற்றிய போதிய புரிதல்/அறிவு  இருக்காது. இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால் இது அவகளுடைய துறை கிடையாது...

சரி விசயத்துக்கு வருவோம்... அவர் தன்னுடைய கணினியில் இமெயில் வேலை செய்யவில்லை என்று புகார் செய்து இருந்தார். நாங்களும் இங்கு இருந்து கொண்டு எல்லா வழங்கிகளும்( Server ) அதனுடைய சேவைகளும் ( Email Service ) சிறப்பாக வேலை செய்வதாக சொல்லி, அவருடைய கணினியை மீள்துவக்க ( Restart ) சொன்னோம். அவரும் அவ்வாறே செய்து விட்டு பார்த்து விட்டு மறுபடியும் எங்களை அழைத்து தற்பொழுதும் வேலை செய்யவில்லை என்றார். ஆக இந்த பிரச்சினையை நேரில் சென்று தான் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து நான் கிளம்பினேன்.

அங்கு நான் சென்றடைந்ததும் அவரை நான் ஒரு முறை முயற்ச்சி செய்து பாக்க சொன்னேன். அப்பொழு அவர் 1,2,3,4,5 என்று டெஸ்க்டாப்-யில் இருக்கும் ஒவ்வொரு ஐகான் வரிசைகளை எண்ணி கொண்டு ஐந்தாவது வரிசையின் கடைசியில் உள்ள ஐகான்-ஐ தேந்தெடுத்து டபுள் கிளிக் செய்தார். அப்படி செய்து விட்டு

"பாத்தீங்களா தம்பி, நானும் காலைல இருந்து இதை தான் பண்ணிட்டு இருக்குறேன், இமெயில் ஓபன் ஆக மாட்டேங்குது. தினமும் இங்க தான் கிளிக் பண்ணுவேன், இமெயில் ஓபன் ஆகிடும். இன்னைக்கு என்ன பிரச்சினையோ? கொஞ்சம் பாத்து சரி பண்ணி குடுங்க... " என்றார்...

எனக்கோ சரியான சிரிப்பு. ஏனென்றால் அவர் டபுள் கிளிக் செய்தது ஒரு வோர்ட் ஃபைல்-க்கான ஐகான். அதை அவர் ஒவ்வொரு முறை டபுள் கிளிக் செய்யும் போதும் அந்த வோர்ட் ஃபைல் தான் அவருக்கு திறந்திருக்கிறது. இந்த பிரச்சினையை தான் இவர் இமெயில் சேவை வேலை செய்யவில்லை என்று எங்களிடம் புகாராக அளித்திருந்தார்.

மேலும் அவரிடம் விசாரித்ததில், அவர் ஒவ்வொரு முறை இமெயில் சேவையை பெற இப்படி தான் ( அதாவது ஐகான் வரிசைகளி எண்ணி, ஐந்தாவது வரிசையில் இருக்கும் கடைசி ஐகான்-யை டபுள் கிளிக் செய்து) செய்வதாக கூறினார்.

யோசித்து பார்த்ததில், முன்தினம் யாரோ ஒருவர் டெஸ்க்டாப்-ல் இருக்கும் ஐகான்-களை Arrange Icons by Name கொடுத்து விட்டு மாற்றியிருக்கக் கூடும் என்று தோன்றியது.

அவ்வளவு தான் ஜோக் முடிஞ்சிடுச்சு... அடுத்ததா படிக்க போங்க...

சம்பவம் 2

Helpdesk Peoples
என்னுடைய அழுவலகத்தில் ஒரு புது நபரை வேலைக்கு அமர்த்தினார்கள். அவனோ இப்பொழுது தான் புதிதாக படித்து முடித்து முதன் முதலாக வேலைக்கு வருகிறவன். கணினியைப் பற்றிய அறிவு அவனுக்கு சுத்தமாக இல்லை. ஒரு டிரெய்னி-யாக அவனை நியமித்திருந்தனர்.மதியம் எல்லாரும் உணவு இடைவேளைக்கு செல்லும் நேரத்தில் அவனை கஸ்டமர் கால்ஸ் அட்டென்ட் செய்ய அமர்த்தி விடுவது வழக்கம்..

அன்று ஒரு நாள் இப்படித் தான், ஒரு கஸ்டமர் ஒரு சின்ன சிஸ்டம் எர்ரர் பிரச்சினைக்காக அழைக்க, என்னுடைய நண்பரோ ஒரு சிஸ்டம் இன்ஸ்டாலேஷன்-யில் வேலையாக இருந்ததால், அந்த எர்ரர் செய்தியை ஒரு ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வாங்கி வைக்க சொன்னார். புதியவருக்கோ ஸ்க்ரீன்ஷாட் எப்படி எடுப்பது என்பது கூட தெரியாது. அதையும் என் நண்பரே சொல்லிக் கொடுத்தார். பிறகு அந்த பிரச்சினை சரி செய்யப் பட்டது.

மற்றொரு நாள் இதே மாதிரி ஒரு கஸ்டமர் அழைக்க, முன்செய்தது போல அவரிடமும் இவன் ஸ்க்ரீன்ஷாட் கேக்க, கஸ்டமர் செம காண்டு ஆகி விட்டார். அவரு எதுக்காக அவ்வளவு டென்ஷன் ஆகி இருப்பாருன்னு நீங்க நெனைக்குறீங்க ?

அவருக்கு வந்த எர்ரர் மெசேஜ்

NTLDR Missing...

சிஸ்டம் பூட் ஆகவில்லை என்று. :)

குறிப்பு :- ஐயா இண்ட்லி-யில் ஓட்டு போடுங்க சாமி....பதிவு மொக்கையா இருந்தாலும் ஓட்டு போடுங்க சாமி...