Wednesday, May 26, 2010

கனவுகள்

வணக்கம் நண்பர்களே...
நான் சிறு வயதில் கொண்டு இருந்த சின்ன சின்ன கனவுகளை இங்கு வரிசைப்படுத்த ஆசை படுகிறேன்.
வாழ்வில் எல்லாருக்கும் அவர்களின் அறியா பருவத்தில் எண்ணற்ற கனவுகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இதை யாரும் மறுப்பதர்க்கு இல்லை. இருந்தாலும் அதில ஒரு நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதை இங்கு நான் சொல்ல போவது இல்லை.




எனக்கும் சிறு வயதில் குட்டி குட்டி கனவுகள் இருந்தது. இதை இந்த வலைப்பூவில் பகிர்வது தான் இந்த பதிவின் நோக்கம். இதில் சில லட்சியகளும் அடங்கும். அதனால Conditions Aplly…
ஒரு காலத்துல ஒரு வீட்டுக்கு ஒரு தொலைக்காட்சி என்பதே ஒரு கனவாக இருந்த காலம். இந்த நேரத்தில் தான் மிகுந்த யோசனைக்கு பிறகு எங்கள் வீட்டில் 14இன்ச் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி சேட்டு பணம் காட்டி வாங்கப்பட்டது. தொலைக்காட்சி வாங்கிய காலம் சரியாக சொல்ல வேண்டும் என்றால் தற்போது பொதிகை என்று அழைக்கப்படும் டிடி1 அந்த காலத்தில் வாரம் ஒரு முறை ஞாயிறு அன்று மாலை வேளையில் ஒரு திரைப்படம் ஒளிபரப்பிய காலம்.
14_Inch_Black_And_White_B_W_Tv
இந்த காலத்துல தான் எங்க மாமா பிபிஎல் 21 இன்ச் கலர் டிவி வாங்கினார். நாம தான் கறுப்பு வெள்ளை டிவிக்கே வாய பொலந்தவங்களாச்சே. இதை விடுவோமா. இதுக்காகவே ஒவ்வொரு நாளும் மாமா வீட்டுக்கு போறது.
அப்புறம் ஒரு நாள் அங்க நடந்த ரிமோட் சண்டையில் மாமா என்னை திட்டி விட்டார். அன்னைக்கு வந்தது பாருங்க கோவம், மவனே நாமலும் படிச்சு ஒரு நல்ல வேலைக்கு போயி இதை விட ஒரு பெரிய டிவி வாங்கணும்டாண்ணு முடிவு பண்ணிட்டேன்.  ஆன அந்த கோவம் போறதுக்கு ரொம்ப நாள் ஆச்சு. இப்போ எங்க வீட்டுலயும் ஒரு சான்ஸுய் 21இன்ச் டிவி இருக்குது. ஆனா பக்குறதுக்குத் தான் நேரம் இல்லை. ஆண்டவனை நெனச்சு நொந்துக்குக்க வேண்டியது தான். நமக்கு நேரம் இருந்தப்போ டிவி இல்லை. இப்போ டிவி இருக்குது நேரம் இல்லை. அதுவும் 100 சேன்னெல்களுக்கு மேல வற்றாத சொன்னாங்க.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கப் படுகின்றது... ( இப்புடி போட்டத் தான் பிரபல பதிவர் ஆக முடியுமாம் )
மீண்டும் தொடரலாம் இல்லை தொடராமலும் போகலாம். அது என்னோட இஷ்டம் உங்களோட கஷ்டம்.
இப்போதைக்கு மீ த எஸ்கேப்... நன்றி வணக்கம்.

No comments: