Friday, November 7, 2008

கனவு

நான் கண்ட, நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஓர் கனவை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகின்றேன்.

நான் பிறந்து வளர்ந்த ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சியில் வந்தது இந்த கனவு. ஒரு மாலை வேலையில் நான் நண்பர்களுடன் cricket ஆடுவதற்காக ஒரு வயல்வெளிக்கு சென்று இருந்தோம். அப்பொழுது மொபைலில் FM கேட்டுக் கொண்டு இருந்தார் என் சக நண்பர். அது சீனா செட் என்பதால் ஆடிக்கொண்டு இருந்த எங்களுக்கும் அதிலிருந்து பாடல் நன்றாகவே கேட்டது. எங்கள் கவனம் முழுவதும் ஆட்டத்திலேயே இருந்தது.

தீடிரென்று பாடல் ஒலிபரப்புக்கு இடையே ஓர் அறிவிப்பு வந்தது இவ்வாறாக " ஓர் முக்கிய அறிவிப்பு. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு உள்ளதால் அங்கு ஓரிரு மணி நேரங்களில் கனத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது." இந்த அறிவிப்புமுடிந்த பின் பாடல் தொடர்ந்தது. இந்த arivippai சட்டை செய்யாத நானும் என் நண்பர்களும் ஆட்டத்திலேயே கவனம் இருந்தது.

பின் சிறிது நேரம் கழித்து அதே அறிவிப்பாளர், " மழையின் தீவிரம் உச்ச kattaththai அடைந்துள்ளதால் நிலையத்தின் இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப் படுகின்றது. " ( இதில் கொடுமை என்னவென்றால் மழை பெய்வது பரமக்குடியில், நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதோ கொடைக்கானலில் இருந்து. அதுக்கும் இதுக்கும் சம்மந்தமே கெடயாது ). இந்த அறிவிப்பின் மூலம் சற்று கலவரமடைந்த நானும் என் நண்பர்களும் ஆட்டத்தை அத்தோடு முடித்து கொள்வதாக முடிவு செய்து வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமானோம். அப்பொழுது சாரல் அடிக்க ஆரம்பித்து இருந்தது.

இது வரை கண்டிராத வரலாற்று சிறப்பு மிக்க மின்னல்களும், இடிகளும் வானத்தை அலங்கரித்துக் கொண்டு இருந்தது. அதை கண்டவுடன் நாங்கள் எங்கள் நடையின் வேகத்தை அதிகமாக்கினோம். அப்பொழுது தூரத்தில் 2 மீட்டர் சுற்றளவுக்கு ரவுண்டாக அந்த இடத்தில் மட்டும் நல்ல மழை பெய்து கொண்டே இருந்தது. அது எங்களை நோக்கி நகர்ந்து கொண்டு வருவதை நாங்கள் கவனிக்க தவறவில்லை. ( இது தான் ரவுண்டு கட்டி மழை பெய்யுரதான்னு அன்று தான் அறிந்து கொண்டேன்.) நாங்கள் எங்கள் நடையை ஓட்டமாக மற்ற வேண்டிய நேரம் வந்தது. அவனவன் தலை தெறிக்க ஓட வேண்டியதாகி விட்டது.

தூரத்தில் பார்த்தல் 5 சிங்கம், 4 புலி என்று விதவிதமான விலங்குகள் எங்களை நோக்கி காட்டில் இருந்து ஊருக்குள் ஓடி வந்தது. ( பி. கு. எங்கள் ஊரில் நாயை தவிர வேறு எந்த ஒரு விலங்கை பார்ப்பதும் மிக அபூர்வமான மற்றும் முடியாத காரியம்.) பிறகு கனவு முடிந்து விட்டது.

கனவுகளுக்கு என்றுமே climax கிடையாது.

Saturday, October 25, 2008

தீபாவளி

தீபாவளி...

இந்த வார்த்தையை கேட்டாலே ஊரில் உள்ள எல்லா அடித்தட்டு மக்களுக்கும், சில நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களுக்கும் டவுசர் கழண்டு காற்றில் பறப்பது கண்கூடு. காரணம், கட்டாய செலவுகள்.
பணி நிமித்தம் சொந்த ஊரை விட்டு வெளியூரில் தங்கி இருக்கும் திருமணமாகத இளைஞர்களும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல. ஊரில் இருக்கின்ற அனைவரும் புது துணிமணிகள் சகிதம் வலம் வர, நாம் மட்டும் பழைய துணியை உடுத்த நமக்கு மனது இடம் கொடுக்காது. அதனால் எல்லாரும் புது துணியை உடுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் படுகின்றார்கள்.
நாம் நினைக்கின்ற மாதிரி அவ்வளவு எளிதில் தீபாவளியை சமாளித்து விட முடியாது. எம்பெருமான் முருகன் எவ்வளவு சிரம் கொண்டு நரகாசுர அரக்கனை வெற்றி கொண்டாரோ அதை விட பன்மடங்கு பலத்தையும், மன தைரியத்தையும் கொண்டு இன்றைய பாமர மக்கள் இந்த தீபாவளியை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டு உள்ளனர்.சாதரணமாக ஒரு சட்டை மற்றும் பேண்ட் வாங்க வேண்டும் என்றாலே குறைந்த பட்சம் 600 ரூபாய் ஒரு தலைக்கு செலவு பிடிக்கும். ஒரு சாதரண கூலித் தொழிலாளிக்கு இங்கு நிலைமை அசௌகர்யாமாகிறது. அவருடைய குடும்பத்தில்அவரையும் அவருடைய மனைவியையும் சேர்த்து ஐந்து பேர் என்று கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட ரூ ௫௦௦௦ க்கு மேல் செலவு பிடிக்கும். வருடம் முழுவதும் வியர்வை சிந்தி உழைத்ததில் பாதி இதிலேயே போயி விடும். இதற்க்கு மேல் அவர் எதிர் கால செலவுகளுக்கும் சேமித்து வைத்து கொள்ள வேண்டும்.
கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளில் தீபாவளி செலவுகள் பன் மடங்கு உயர்ந்து விட்டது. எனக்கு நினைவு தெரிந்த நாளில் ஐம்பது ரூபாய் வெடியில் மொத்த குடும்பமே தீபாவளியை முடித்து விடலாம். ஆனால் இன்று ஒரு குழந்தைக்கு இருநூறு ரூபாய் Gift பாக்ஸ் வாங்கி கொடுத்தால் அதை சமாதானம் செய்ய முடிகின்றது.

ஆகா மொத்தம் இந்த தீபாவளி ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்பம் கலந்த ஒரு துன்பத்தை கொடுக்கப் போவது திண்ணம்.

இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்