Saturday, May 29, 2010

சுறா - லேட் விமர்சனம்

என்னடா படம் வந்து ஒரு மாசாத்துக்கும் மேல ஆச்சே. இப்போ விமர்சனம் போடுறானெண்ணு பாக்கதீங்க....
பதிவுலகில் நம்ம ஆளுங்க குடுத்த விம்ர்சாணங்களா படிச்சிட்டு மெதுவா ஓசியில முடிஞ்ச பாத்துக்லாம்னு விட்டுட்டேன். நேத்து தான் இந்த காவியத்தை காணும் பாக்கியம் பெற்றேன். தன்யன் ஆனேன்.


Tamil_Movie_Sura_Photos01
ஏற்கனவே நம்ம பதிவுலக மக்கள் ரொம்பவே டேமேஜ் பண்ணிட்டாங்க. அதனால அதெல்லாம் படிச்சிட்டு நான் ஒரு நல்ல மூட்ல படம் பார்க்க தான் அமர்ந்தேன். அதாவது இந்த படம் பாருக்கும் போது நான் எல்லாத்தையும் மறந்து உலக சினிமா என்கின்ற அளவுகோலை கையில் எல்லாம் எடுக்காமல், அட அது எதுக்கு, உள்ளூர் சினிமா என்கின்ற அளவு கோலை கூட எடுக்காமல் தான் அமர்ந்தேன். அதனால எனக்கு இது ஒரு சிறந்த பொழுது போக்கு படமாக அமைந்தது.
இதுக்கு மேல படிக்கிறதா வேணாமாண்ணு தான யோசிக்கிறீங்க... படிங்க மக்கா...
படம் ஆரம்பம். ஹீரோ வந்தாரு. ஆரம்பத்தில் சண்டைக்கு பதிலாக இவரு ஒரு ஊரையே காப்பாத்துனார்.ம்ம... வித்தியாசம்.சந்தோஷம். அப்புறம் ஒரு பாட்டு. முடிஞ்சது. அப்புறம் கதாநாயகி அறிமுகம். அதுக்கு அப்புறம் வில்லன் அறிமுகம். எல்லாம் சரியா தான் போனது. இதுவரை எனக்கு படத்துல எனக்கு எந்த வித்தியாசமும் தெரியலை. அதுக்கு அப்புறம் தான் இது ஒரு வித்தியாசமான படம் என்று இயக்குனர் நம்மை இருக்கையின் நுனிக்கு அழைத்து செல்கின்றார்.
அதுக்கு அப்புறம் திரைப்படம் பூரா ஒரே திருப்பம் நிறைந்ததாகவே இருந்தது. கடைநிலை ரசிகன் கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தீபாவளி ராக்கெட் எல்லாம் வச்சு வில்லணை பயமுறுத்தி 100கோடி ரூபாய் சரக்கை ஆட்டய போடுகின்றார். அதுக்கு அடுத்த காட்சியிலயே ஒரு பாட்டு கூட இல்லாமல் தமிழ் சினிமா மரபை உடைக்கும் விதத்தில் பணக்காரர் ஆகின்றார். ஆடி காரு கண்ணாடி கோட் சூட்டு என்று கலக்குராறு.
அப்புறம் வழக்கம் போல வில்லனை துவம்ஸம் செய்து நீதியையும் தர்மத்தையும் நிலை நாட்டுகின்றார். அவரு அதை நிலை நாட்டுற விதம் தான் நமக்கு அநியாயமா படுது.
உன்னோட வலைல மாட்டுறதுக்கு நான் ஒண்ணும் ஏறா கிடையாது சுரான்னு சொல்றாறு. சொன்ன மாதிரியே பாக்ஸ் ஆஃபிஸ்ல என்ற வலையில் எங்கயுமே மாட்டாம வீடு திரும்பிட்டார்.
சுறா - )(*^&)*(@^*(*&*&@^*(@(*

3 comments:

சாமக்கோடங்கி said...

நான் இன்னும் படம் பாக்கலை.. பாக்கவும் தோணலை...

நல்ல விமர்சனம்..

நன்றி..

தனுசுராசி said...

வருகைக்கு நன்றி பிரகாஷ்

பெசொவி said...

நல்லா எழுதியிருக்கீங்க....அப்படியே புத்தம் புதிய காப்பியமான வேட்டைக்காரன் படத்துக்கும் விமரிசனம் எதிர்பார்க்கிறேன்.