Friday, December 3, 2010

IT Jokes - தகவல் தொழில்நுட்ப சுவையான சம்பவங்கள்

பொதுவாக ஒரு அழுவலகத்தில் வேலையில் இருந்தால் கண்டிப்பாக அங்கு பல சுவையான சம்பவங்கள் நடக்கும். அதுவும் இளைஞர்கள் இருக்கும் இடத்தில் இந்த மாதிரியான விசயங்களுக்கு பஞ்சமே இருக்காது. அதுவும் IT துறையில் சொல்லவே தேவை இல்லை. அப்படி நான் பணியாற்றிக் கொண்டு இருந்த எனது முன்னாள் அழுவலகத்தில் நான் சந்தித்த சில சுவாரஸ்யமான விஷயங்கள்...
சம்பவம் 1

Computer Techie
நான் என்னுடைய பழைய அழுவலகத்கில் கணினி பழுது பார்க்கும் ( Desktop Engineer ) வேலையில் இருந்தேன். ஒவ்வொரு பயனாளர்களும் ( End users ) தங்கள் கணினியில் ஏதாவது பிரச்சினைகளை சந்திக்கும் போது எங்களை அழைத்து பிரச்சினைகளை சரி செய்வது வழக்கம். அன்றும் அதே போல் ஒரு துறையின் துணைப் போது மேலாளர் ( Deputy General Manager ) என்னை அழைத்தார்.

இந்த அழுவலகமானது கனரக வாகனங்களை உற்பத்தி செய்யும் அழுவலகம். அதனால் இங்கு இருக்கும் கடைநிலை பயனாளர்களுக்கு கணினியை பற்றிய போதிய புரிதல்/அறிவு  இருக்காது. இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால் இது அவகளுடைய துறை கிடையாது...

சரி விசயத்துக்கு வருவோம்... அவர் தன்னுடைய கணினியில் இமெயில் வேலை செய்யவில்லை என்று புகார் செய்து இருந்தார். நாங்களும் இங்கு இருந்து கொண்டு எல்லா வழங்கிகளும்( Server ) அதனுடைய சேவைகளும் ( Email Service ) சிறப்பாக வேலை செய்வதாக சொல்லி, அவருடைய கணினியை மீள்துவக்க ( Restart ) சொன்னோம். அவரும் அவ்வாறே செய்து விட்டு பார்த்து விட்டு மறுபடியும் எங்களை அழைத்து தற்பொழுதும் வேலை செய்யவில்லை என்றார். ஆக இந்த பிரச்சினையை நேரில் சென்று தான் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து நான் கிளம்பினேன்.

அங்கு நான் சென்றடைந்ததும் அவரை நான் ஒரு முறை முயற்ச்சி செய்து பாக்க சொன்னேன். அப்பொழு அவர் 1,2,3,4,5 என்று டெஸ்க்டாப்-யில் இருக்கும் ஒவ்வொரு ஐகான் வரிசைகளை எண்ணி கொண்டு ஐந்தாவது வரிசையின் கடைசியில் உள்ள ஐகான்-ஐ தேந்தெடுத்து டபுள் கிளிக் செய்தார். அப்படி செய்து விட்டு

"பாத்தீங்களா தம்பி, நானும் காலைல இருந்து இதை தான் பண்ணிட்டு இருக்குறேன், இமெயில் ஓபன் ஆக மாட்டேங்குது. தினமும் இங்க தான் கிளிக் பண்ணுவேன், இமெயில் ஓபன் ஆகிடும். இன்னைக்கு என்ன பிரச்சினையோ? கொஞ்சம் பாத்து சரி பண்ணி குடுங்க... " என்றார்...

எனக்கோ சரியான சிரிப்பு. ஏனென்றால் அவர் டபுள் கிளிக் செய்தது ஒரு வோர்ட் ஃபைல்-க்கான ஐகான். அதை அவர் ஒவ்வொரு முறை டபுள் கிளிக் செய்யும் போதும் அந்த வோர்ட் ஃபைல் தான் அவருக்கு திறந்திருக்கிறது. இந்த பிரச்சினையை தான் இவர் இமெயில் சேவை வேலை செய்யவில்லை என்று எங்களிடம் புகாராக அளித்திருந்தார்.

மேலும் அவரிடம் விசாரித்ததில், அவர் ஒவ்வொரு முறை இமெயில் சேவையை பெற இப்படி தான் ( அதாவது ஐகான் வரிசைகளி எண்ணி, ஐந்தாவது வரிசையில் இருக்கும் கடைசி ஐகான்-யை டபுள் கிளிக் செய்து) செய்வதாக கூறினார்.

யோசித்து பார்த்ததில், முன்தினம் யாரோ ஒருவர் டெஸ்க்டாப்-ல் இருக்கும் ஐகான்-களை Arrange Icons by Name கொடுத்து விட்டு மாற்றியிருக்கக் கூடும் என்று தோன்றியது.

அவ்வளவு தான் ஜோக் முடிஞ்சிடுச்சு... அடுத்ததா படிக்க போங்க...

சம்பவம் 2

Helpdesk Peoples
என்னுடைய அழுவலகத்தில் ஒரு புது நபரை வேலைக்கு அமர்த்தினார்கள். அவனோ இப்பொழுது தான் புதிதாக படித்து முடித்து முதன் முதலாக வேலைக்கு வருகிறவன். கணினியைப் பற்றிய அறிவு அவனுக்கு சுத்தமாக இல்லை. ஒரு டிரெய்னி-யாக அவனை நியமித்திருந்தனர்.மதியம் எல்லாரும் உணவு இடைவேளைக்கு செல்லும் நேரத்தில் அவனை கஸ்டமர் கால்ஸ் அட்டென்ட் செய்ய அமர்த்தி விடுவது வழக்கம்..

அன்று ஒரு நாள் இப்படித் தான், ஒரு கஸ்டமர் ஒரு சின்ன சிஸ்டம் எர்ரர் பிரச்சினைக்காக அழைக்க, என்னுடைய நண்பரோ ஒரு சிஸ்டம் இன்ஸ்டாலேஷன்-யில் வேலையாக இருந்ததால், அந்த எர்ரர் செய்தியை ஒரு ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வாங்கி வைக்க சொன்னார். புதியவருக்கோ ஸ்க்ரீன்ஷாட் எப்படி எடுப்பது என்பது கூட தெரியாது. அதையும் என் நண்பரே சொல்லிக் கொடுத்தார். பிறகு அந்த பிரச்சினை சரி செய்யப் பட்டது.

மற்றொரு நாள் இதே மாதிரி ஒரு கஸ்டமர் அழைக்க, முன்செய்தது போல அவரிடமும் இவன் ஸ்க்ரீன்ஷாட் கேக்க, கஸ்டமர் செம காண்டு ஆகி விட்டார். அவரு எதுக்காக அவ்வளவு டென்ஷன் ஆகி இருப்பாருன்னு நீங்க நெனைக்குறீங்க ?

அவருக்கு வந்த எர்ரர் மெசேஜ்

NTLDR Missing...

சிஸ்டம் பூட் ஆகவில்லை என்று. :)

குறிப்பு :- ஐயா இண்ட்லி-யில் ஓட்டு போடுங்க சாமி....பதிவு மொக்கையா இருந்தாலும் ஓட்டு போடுங்க சாமி...

6 comments:

Anonymous said...

// பதிவு மொக்கை இல்லை, ஆனால் சாஃப்ட்வேர் துறையினார் சிரிக்க முடியும் //

// ஒட்டு போடலாம் ஆனா இண்ட்லி பட்டன் சரியாக லிங்க் ஆகவில்லை, அதை சரி செய்யுங்க ஓட்டு தானா விழும் சாம் //

வாழ்த்துக்கள்

DR said...

வாங்க அங்கிதாவர்மா...

இப்பொழுது இண்ட்லி மற்றும் தமிழ்மணம் ஒட்டுப்பட்டையை சரிசெய்து விட்டேன்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

shabi said...

அழுவலகம் இல்ல அலுவலகம் ....

shabi said...

அழுவலகம் இல்ல அலுவலகம் ....

Indian said...

good one.

DR said...

பந்து, சபி, இந்தியன் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@சபி கண்டிப்பா மாத்திடுறேன்...