Saturday, October 25, 2008

தீபாவளி

தீபாவளி...

இந்த வார்த்தையை கேட்டாலே ஊரில் உள்ள எல்லா அடித்தட்டு மக்களுக்கும், சில நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களுக்கும் டவுசர் கழண்டு காற்றில் பறப்பது கண்கூடு. காரணம், கட்டாய செலவுகள்.
பணி நிமித்தம் சொந்த ஊரை விட்டு வெளியூரில் தங்கி இருக்கும் திருமணமாகத இளைஞர்களும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல. ஊரில் இருக்கின்ற அனைவரும் புது துணிமணிகள் சகிதம் வலம் வர, நாம் மட்டும் பழைய துணியை உடுத்த நமக்கு மனது இடம் கொடுக்காது. அதனால் எல்லாரும் புது துணியை உடுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் படுகின்றார்கள்.
நாம் நினைக்கின்ற மாதிரி அவ்வளவு எளிதில் தீபாவளியை சமாளித்து விட முடியாது. எம்பெருமான் முருகன் எவ்வளவு சிரம் கொண்டு நரகாசுர அரக்கனை வெற்றி கொண்டாரோ அதை விட பன்மடங்கு பலத்தையும், மன தைரியத்தையும் கொண்டு இன்றைய பாமர மக்கள் இந்த தீபாவளியை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டு உள்ளனர்.சாதரணமாக ஒரு சட்டை மற்றும் பேண்ட் வாங்க வேண்டும் என்றாலே குறைந்த பட்சம் 600 ரூபாய் ஒரு தலைக்கு செலவு பிடிக்கும். ஒரு சாதரண கூலித் தொழிலாளிக்கு இங்கு நிலைமை அசௌகர்யாமாகிறது. அவருடைய குடும்பத்தில்அவரையும் அவருடைய மனைவியையும் சேர்த்து ஐந்து பேர் என்று கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட ரூ ௫௦௦௦ க்கு மேல் செலவு பிடிக்கும். வருடம் முழுவதும் வியர்வை சிந்தி உழைத்ததில் பாதி இதிலேயே போயி விடும். இதற்க்கு மேல் அவர் எதிர் கால செலவுகளுக்கும் சேமித்து வைத்து கொள்ள வேண்டும்.
கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளில் தீபாவளி செலவுகள் பன் மடங்கு உயர்ந்து விட்டது. எனக்கு நினைவு தெரிந்த நாளில் ஐம்பது ரூபாய் வெடியில் மொத்த குடும்பமே தீபாவளியை முடித்து விடலாம். ஆனால் இன்று ஒரு குழந்தைக்கு இருநூறு ரூபாய் Gift பாக்ஸ் வாங்கி கொடுத்தால் அதை சமாதானம் செய்ய முடிகின்றது.

ஆகா மொத்தம் இந்த தீபாவளி ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்பம் கலந்த ஒரு துன்பத்தை கொடுக்கப் போவது திண்ணம்.

இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

No comments: