நான் இது வரை ஒரு வருடத்திருக்கும் மேலாக கூகிள் டாக்ஸ் உபயோகித்து வருகின்றேன். அதில் இருக்கும் சில நிறை மற்றும் குறைகளை இங்கு வகைப்படுத்த விரும்புகின்றேன்.
பொதுவாக நான் அறிந்த வரையில் இந்த சேவையை முதன் முதலில் ஆரம்பித்தது கூகிள் என்று தான் நினைக்கிறேன். பின்னர் zoho போன்ற தளங்கள் போல் நிறைய தளங்கள் இப்பொழு
து இந்த சேவையை வழங்குகின்றன. சரி விசயத்திருக்கு செல்வோம்.
முதலில் நிறைகள்...
1.கூகிள் டாக்ஸ் உபயோகித்து நீங்கள் உங்களுடைய வோர்ட், எக்ஸ்செல், மற்றும் பவர் பாயிண்ட் கோப்புகளை நீங்கள் உலகத்தின் எந்த ஒரு மூலையில் இருந்தும் பெற்று கொள்வதுடன் அதை எந்த ஒரு மென்பொருளின் ( Client Software like MS Office ) துணையும் இன்றி அதனை நீங்கள் அகப்பக்கத்தில் இருந்தா படியே அதனை நீங்கள் எடிட் செய்யலாம்.
2. இதை உபயோகிப்பதனால் நீங்கள் மைக்ரோசாப்ட் ஆபீஸ் போன்ற மென்பொருள்களை பணம் செலுத்தி வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
3. இதில் தங்கள் கணக்குக்கென்று பிரத்யேகமாக 1 GB அளவுள்ள நினைவகம் இலவசமாக வழங்கப்படுகின்றது.
4. இதன் மூலம் நீங்கள் நண்பர்களுடன் நீங்கள் கோப்புகளை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளவும், கூட்டாக சேர்ந்து ஒரே கோப்பை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் Online Editing கூட செய்ய முடியும்.
5. கோப்பை மின்னஞ்சல் வழியாக அட்டச் செய்வதற்கு பதிலாக, அந்த தனி கோப்பை ஒரே ஒரு முறை பயன்படுத்தும் படி அவருக்கு Permission கொடுக்கும் வசதி உள்ளது. ( கோப்புகளின் அளவு பெரிதாக இருக்கும் பட்சத்தில் மற்றும் நீங்கள் அந்த கோப்பின் பிரதி உங்கள் நண்பர்களிடம் இருப்பதை விரும்பாத பட்சத்தில் இந்த முறையை உபயோகிக்கலாம்.)
இதில் இருக்கும் சில தவிர்க்க முடியாத குறைகள்:-
1. முதலாவதாக இதை இனைய இணைப்பு இல்லையென்றால் உங்களால் பயன் படுத்த முடியாது. அதனால் உங்களுக்கு மிக முக்கியமான தேவையுள்ள தருணங்களில் உங்களுடைய கோப்புகளை உங்களால் பயன் படுத்த முடியாத குறை உள்ளது.
2. உங்களுடைய கடவுச்சொல் திருடு போகும் நேரத்தில் மற்றவர்கள் உங்களுடைய அனைத்து கோப்புகளையும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் திருடும் வாய்ப்பு உள்ளது. இதே உங்களுடைய கணினியில் இருந்தால் அதன் வாய்ப்புகள் குறைவு.
3.இதை ஓரளவு அடிப்படை வேலைகளுக்கே பயன் படுத்த முடியுமே தவிர, இதற்கென்றே பிரத்யேகமாக உள்ள மைக்ரோசாப்ட் ஆபீஸ் போன்ற மென்பொருள்களில் உள்ள அனைத்து வசதிகளும் இதில் கிடைக்காது.
தங்களுக்கு இதில் தெரிந்த ஏதேனும் நிறை குறைகள் இருந்தாலும் பின்னூட்டத்தில் தயவு செய்து தெரிவிக்கவும். நன்றி .
No comments:
Post a Comment