Monday, February 8, 2010
அசல் - என் பார்வையில்...
படம் டிரைலர் எல்லாம் சூப்பரா இருந்துது. அஜித் நடை உடை எல்லாம் நல்லா இருந்தது. அப்பறம் டொட்டோடைங்க் பாட்டும் நல்லா இருந்தது. எல்லாத்தையும் சேர்த்து ஒரு எதிர்பார்போட போனேன் படத்துக்கு. என்னுடைய எதிர் பார்ப்பு நிறைவேறியதா என்றால்
அது ஓரளவு தான் என்று சொல்ல தோன்றுகின்றது.
படத்தின் கதை வழமையாக தமிழ் சினிமாவில் இருக்கும் கதை தான். வித்தியாசம் என்னவென்றால் படமாக்கப்பட்ட விதமும் திரைகதையை வழங்கிய விதமும் தான். படத்தின் ஆரம்பத்தில் தொன்று தொட்டு தமிழ் சினிமாவில் கடைபிடிக்க பட்டு வரும் நாயகன் அறிமுகம் ஒரு சண்டையுடன் ஆரம்பமாகின்றது. முடிந்தவுடன் நாம் எதிர் பார்த்த மாதிரி ஒரு பாட்டு வருகின்றது. ஒரு வித்தியாசம் என்னவென்றால் நாயகன் தன்னுடைய சுய புராணம் அவரே பாடாமல் நாயகி நாயகனின் புராணன் பாடுகின்றார். அஜித்தே ஆசைப்பட்டாலும் நம்ம சரண் இவரை தல என்று சொல்வதை நிறுத்த மாட்டார் போல். படம் முழுவதும் வரும் இந்த தல புராணம், வேண்டும் என்றால் அஜித் ரசிகர்கள் ரசிப்பார்கள். மற்றவர்களுக்கு இது சிறிய எரிச்சலை தான் தருகின்றது. அதே மாதிரி ஆரம்ப பாடல் ஜேம்ஸ் பான்ட் டைட்டில் சாங் நினைவிற்கு வருகின்றது.
பிறகு படத்தில் தேவைக்கு அதிகமாகவே வில்லன்கள் இருப்பதாகவே தோன்றுகின்றது. ஆனா எல்லாம் நல்லா நடிக்க கூடிய வில்லன்கள் இந்த திரை படத்தில் வீணடிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அவர்களை இன்னும் திறமையாக உபயோகித்து இருக்கலாம். படத்தின் நடுவிலேயே சரியான பில்ட் அப் கொடுக்கப் பட்ட வில்லன் இறந்து விடுவதால் மீதி கதையை அதிகமாக பில்ட் அப் இல்லாத காமெடி வில்லன்கள் கையில்.
ஒன்றுக்கு இரண்டு நாயகிகள். பாவனா மற்றும் சமீரா வருகின்றனர் . ரெண்டு பாட்டு அப்பறம் வில்லனால் கடத்தப் படுகின்றார். அவ்வளவு தான். மத்த படி நாயகிகளை பற்றி சொல்வதற்கு ஒன்னும் இல்லை.
யூகி சேது. சிறிது காமெடி செய்ய விளைந்து சிறிது வெற்றியும் பெறுகின்றார். அதே மாதிரி தயாரிப்பாளர் பிரபுவும் அப்போ அப்போ வந்து தல காட்டி விட்டு செல்கின்றார்.
"தமிழ் படம்" இன் டைட்டில்லில் உபயோகித்த "இது சத்தியமா வித்தியாசமான படம் இல்லை" என்பது இந்த படத்துக்கு மிக மிக பொருந்தும்.
அசல் - 75 வருட தமிழ் சினிமாவின் நகல்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
appo padam enna aachchu ?
Post a Comment