டிஸ்கி :- இது ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் அல்ல. விமர்சனம் பண்ற அளவுக்கு எல்லாம் நான் ஒன்னும் பெரிய ஆள் கிடையாது. இது என்னுடைய பார்வை இந்த திரை படத்தை பற்றி.
நேத்து தான் ( ஞாயிறு ) போய் இந்த படத்த நண்பர் ஒருவருடன் காண கிடைத்தது. படம் ஆரம்பத்தில் இருந்து கொஞ்சம் தொய்வாக போய்கொண்டு இருந்தாலும் ஒரு 20 நிமிடதிருக்கு பிறகு ஓரளவுக்கு நிமிர்ந்து உக்கார செய்கின்றார் இயக்குனர்.
படத்தின் ஆரம்ப கட்சிகளில் கார்த்தியின் தோற்றம் பருத்தி வீரனை நினைவு படுத்துகின்றது. பிறகு சிறிது நேரம் கழித்து தான் அவரை நாம் ஆயிரத்தில் ஒருவன் கார்த்தியாக காண முடிகிறது. ஆரம்பத்தில் இவருக்கு கொடுக்கப்பட்ட அறிமுக காட்சிகள் வழக்கம் போல் பல திரைப்படங்களில் வருவது போல் இருந்தாலும் அதுக்கு அப்பறம் வர்ற கட்சிகள் அதை சரி படுத்துது.
அப்பறம் ஆண்ட்ரியா அவர்களை சொல்ல வேண்டும். ஒழுங்கா ஒரு நல்ல டிரஸ் இயக்குனர் இவருக்கு வாங்கி கொடுத்து இருக்கலாம். இவருடைய கவர்ச்சி ஏனோ எரிச்சலை தான் வர வைக்கின்றது. பலவந்தமாக திணிக்கப்பட்டதாக தோன்றுகின்றது. அப்பறம் ரீமா சென். நல்லா நடித்திருக்கிறார் என்று எல்லாரும் சொல்றாங்க. ஆனா ஒன்னும் அந்த அளவுக்கு குடுத்த கதா பாத்திரத்தை இவரு
முளுமயாக்குன மாதிரி தெரியல. ஏதோ மிஸ்ஸிங் இருக்குது. ஆனா அடுத்து அடுத்து வர்ற காட்சிகளின் கோர்வையால் அதை நாம் மறக்க வேண்டி இருக்கிறது. இவரோட ( ரீமா சென் ) நடிப்ப நாம பாத்திக்கிட்டு இருந்தா அப்பறம் எங்க படத்த பாக்குறது.
பார்த்திபன்... இப்போ தான் தலைவர் ( ரஜினி ) எந்திரன் படத்துக்கு அப்பறம் தன்னோட வயசுக்கு ஏத்த மாதிரி கதா பத்திரத்தில் தான் நடிப்பேன்னு சொல்லி இருக்குறாரு. அதுக்குள்ள இவரு ஆரம்பிச்சிடாரு. நல்ல கதா பாத்திரம் இவருக்கு. அதுக்கு ஏத்த மாதிரி இவரும் நல்ல நடிசிருக்காரு.
எல்லாரும் ரீமா சென் தான் நல்லா நடிச்சிருக்காருன்னு சொல்றாங்க. ஆனா என்னோட பார்வையில் பார்த்திபன் தான் அந்த இடத்தை பிடிக்கிறாரு.
இவ்வளவு நேரம் சொல்லி என்னடா கதையே சொல்லலைன்னு பாக்குறீங்களா.
இன்னொரு தடவ பார்த்து நல்லா புரிஞ்சதுக்கு அப்பறம் வந்து சொல்றேன்...
No comments:
Post a Comment