இந்த மாதிரி எல்லாம் எவனுக்கும் கனவு வராதுன்னு நெனைக்குறேன். இந்த கனவ நெனச்சு நான் நெறைய தடவ பயங்கரமா சிரிச்சது உண்டு. அப்படியாகப்பட்ட கனவ நான் உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ள ஆசை படுகின்றேன்.
இடம் :- சத்யம் திரையரங்கம்
நேரம்:- மாலை கட்சி நேரம்
டிக்கெட் வாங்கிட்டு நான் மற்றும் என்னோட நண்பர்கள் எல்லாம் உள்ள போய் உக்கார்ரதுக்கு சீட்டதேடிகிட்டு இருக்குறோம். உள்ள போயி பாத்தா எல்லா சீட்டும் புல்லா இருக்குது. எங்க ஊருதியேட்டர்ல தான் ஹவுஸ் புல் ஆனாலும் நிறுத்தாம டிக்கெட் குடுத்துகிட்டு இருப்பானுங்க. இங்கயுமான்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டேன். அப்பறமா அங்க ஓரமா நின்னுகிட்டு இருந்த அந்த தியேட்டர் ஊழியரா கூப்பிட்டு டிக்கெட்ட செக் பண்ணிக்கலாமேன்னு அவன்கிட்ட போனா அவன் உங்க இருக்கை மேல இருக்குது பாருங்கன்னு சொன்னான். என்னதுன்னு உள்ள போய் பத்த அங்க சீட் எல்லாம் மேல அந்தரத்துல தொங்கிகிட்டு இருக்குது.
( அந்தரத்துல அப்புடீன்னா இந்த திருவிழாவுல ராட்டினத்துல குதிரை அப்பறம் யானை இன்ன பிற வகையறா எல்லாம் சங்க்ளியில கட்டி வச்சிருபான்களே அந்த மாதிரி தொங்கிகிட்டு இருந்தது. ) அந்த சீட்டுல ஏறி உக்கார்ரதுக்கு எதுவாக ஒவ்வொரு இருக்கைக்கும் ஒரு சங்கிலி மேல இருந்து தொங்கிகிட்டு இருக்கும். நீங்க அத புடிச்சிகிட்டு ஏறனும். என்னடா இது சத்யம் தியேட்டர்ல இப்புடி எல்லாம் பண்ண ஆரம்பிசுடாங்கலேன்னு நொந்து போயி சீட் மாத்த முடியுமான்னு அந்த ஊழியர் கிட்டே கேட்டேன். அவரும் செக் பண்ணி பாக்குறேன்னு சொல்லிட்டு அதே மாதிரி கீழ சீட்டும் வாங்கி தந்தாரு. என்னோட டிக்கெட் மாத்தி எடுத்துட்டு போனவன் அந்த சீட்டுக்கு எப்புடி போறான்னு பாத்துகிட்டே இருந்தேன்.
அந்த அந்தரத்துல தொங்கிகிட்டு இருக்குற இருக்கைகேல்லாம் ஒரு தனி திரையே இருக்குது. அதவும் மேல இருந்து சங்கிலி கட்டி தொங்கிகிட்டு இருக்குது. அதுலயும் இதே படம் தான் போடுவாங்கன்னு சொல்லிட்டான் அந்த திரையரங்க ஊழியர். சரின்னு சொல்லிட்டு படம் பக்க உக்காந்தாச்சு. எல்லா விளக்கையும் அணைச்சு கும் இருட்டு. படமும் போட்டானுங்க.
அப்போ தான் அந்த சம்பவன் நடந்தது. என்னோட இருக்கை பாத்தீங்கன்னா அரங்கதோட நடுவுல இருக்குது. சோ முன்னாடி இருக்குற கேட் வழிய யாரு வந்தாலும் பாத்துரலாம். திடீர்ன்னு ரெண்டு மர்ம ஆசாமிகள் உள்ள நுழைந்தார்கள். இவங்கள நான் மர்ம ஆசாமிகள் என்று சொல்வதற்கு காரணம் என்னான்னா ரெண்டு பேருமே பிரெண்ட்ஸ் படத்துல ஒரு சீன்ல நம்ம சார்லி விஜயையும் சூர்யாவையும் அடிக்கிறதுக்காக உருட்டு கட்டையோட ஒரு கருப்பு கலர் போர்வை ஒன்னு போத்திகிட்டு போவாரே. அதே கெட்டப்ல தான் அவங்க ரெண்டு பேருமே இருந்தாங்க. என்ன சார்லி கையில உருட்டு கட்டை, இவங்க கையில ஒரு டார்ச் லைட். அவங்க ரெண்டு பேருமே உள்ள நுழைஞ்சதும் மோத சீட்ல இருந்து ஆரம்பிச்சு ஒவ்வொரு வரிசையா எல்லாரோட மூஞ்சியிளையும் டார்ச் லைட் அடிச்சி பாத்துகிட்டே வந்தாங்க. டார்ச் லைட் அடிச்சவன் பக்கதுல இருந்த தன்னோட பாஸ் கிட்ட ஒவ்வொருத்தனா காட்டி, சார் இவனா ? சார் இவனான்னு கேட்டுகிட்டு இருந்தான். சரி ஏதோ போலீஸ் செக்கிங் போலன்னு நானும் படம் பக்க ஆரம்பிச்சேன். ஒரு பத்து நிமிடம் கழித்து ரெண்டு பேருமே என்னோட வரிசைக்கு வந்துட்டாங்க.
சார் இவனா?
இல்ல
சார் இவனா?
இல்ல
என் பக்கத்துலையே வந்துட்டாங்க. என் மூஞ்சியில லைட் அடிச்சதும், சார் இவனான்னு கேக்க, அவரோட வந்தவனும் இவன்தான்யா புடி அவனன்னு ரெண்டு பேருமே என்னோட சட்ட கழுத்த ப்புடிசிடாங்க. எனக்கோ ஒண்ணுமே புரியல.
இந்த நேரத்துல தான் உங்களுக்கு முக்கியமான் ஒரு பிளாஷ் பாக் சொல்லியே ஆகணும். இது கனவில் வந்தது அல்ல. இந்த கனவை உங்களுக்கு புரிய வைக்க சொல்ல படும் துணை கதை.
பிளாஷ் பாக்:- ( சுத்துடா கொசுவத்திய...)
நான் வேலை செய்த பழைய நிறுவனத்தில் Information Security Team ஒன்னு இருக்குது. அதுக்கு ஒரு மேலதிகாரியும் அண்ட் சில துணை அதிகாரிகளும் இருப்பாங்க. இவங்களோட வேலை என்னான்னா எல்லாருக்கும் Information செக்யூரிட்டி இன் முக்கியத்துவத்தை புரிய வைக்கிறது. அதுக்காக வார வாரம் ஆள் புடிச்சு ( கணக்கு காட்டுறதுக்காக ) ஒரு ட்ரைனிங் கிளாஸ் எடுப்பாங்க. இந்த ட்ரைனிங் அட்டென்ட் பண்றதுக்கு எங்க பசங்க அநியாயத்துக்கு பய படுவாங்க. ஏன்னா 100 சதவிகித தூக்கம் உறுதி என்று நம்மவர்களால் நம்ப பட்டதே காரணம். அவரு ட்ரைனிங் எடுக்கும் பொது கூட கொஞ்சம் சத்தமா பேசுனாலே ஒரு இன்ட்ரெஸ்ட் இருக்கும். அவரு என்னடான்னா அவருக்கு மட்டும் தான் கேக்குற மாதிரி கடமைக்கு பேசுவாரு. இதனால இந்த ட்ரைனிங் என்று கேள்வி பட்டாலே எல்லாரும் கஸ்டமர் கிட்ட ஒரு முக்கியமான அப்பயின்ட்மன்ட் இருக்குதுன்னு எஸ்கேப் ஆரதுக்கே பாப்பானுங்க. இந்த கும்பலில் நானும் ஒருவன்.
சோ மீண்டும் டு தி கதை, சீ கனவு...
சார், யாரு நீங்க ? என்னைய எதுக்கு புடிகிறீங்க...?
எதுவா இருந்தாலும் வெளியில வா பேசிக்கலாம்.
சார் யாருன்னு சொல்லுங்க... நீங்க பாட்டுக்கு வந்தீங்க இப்புடி என்னமோ திருடன இழுத்திட்டு போற மாதிரி கூட்டிட்டு போறீங்க ?
"தம்பி, எதுவா இருந்தாலும் வாங்க வெளியில வச்சு பேசிக்கலாம்" என்று ஒரு வழியா வெளியில கூட்டிகிட்டு வந்திட்டாங்க. வெளியில பாத்தா நம்ம பழைய படத்துல அதாவது நடுத்தர வயது சினிமால எல்லாம் கதாநாயகிய கடத்திட்டு போக ஒரு கருப்பு கலர் ஆம்னி வச்சிருபான்களே அந்த் வண்டி நின்னது. நேர போய் கதவ திறந்து என்னைய உள்ள தள்ளி விட்டாங்க. இன்னும் நான் அவங்கள கெஞ்சிகிட்டு தான் இருக்குறேன். " சார், யாருன்னு தான் சொல்ல மாட்டேங்குறீங்க, எங்க கூட்டிகிட்டு போறேன்னாவது சொல்லுங்களேன்". ம்ஹும், அதுக்கும் பதில் இல்ல, ஒருத்தர் கத மூடிடுடு வண்டிய ஒரு சுத்து சுத்தி டிரைவர் சீட்ல உக்காந்தாரு, இன்னொருத்தர் அதுக்கு பக்கத்து சீட்ல உக்காந்துட்டாரு.
ரெண்டு பெரும் உள்ள உக்காந்த உடனே அவங்க மேல போட்டு இருந்த போர்வைய எடுத்தாங்க. இரவு நேரம் என்பதால் அவங்க மூஞ்சி எனக்கு சரியா தெரியல. ரெண்டு பெரும் இப்போ ஒண்ணா இப்போ என்னோட பக்கம் திரும்பி பாத்தாங்க. பாத்தா உடனே நான் அப்புடியே ஷாக் ஆயிட்டேன். அவங்க ரெண்டு பேருமே வேற யாரும் இல்லை. என்னோட டீம் லீட் அண்ட் ப்ராஜெக்ட் மேனேஜர்.
சார் நீங்களா... சார் நீங்களா...
நாங்க தான்... நாங்க தான்...
என்ன சார் நீங்க இப்புடி எல்லாம் பண்றீங்க, என்ன பிரச்சினை ? எதுக்கு என்னைய இப்புடி ஏதோ கடத்திட்டு போற மாதிரி கூட்டிகிட்டு வர்றீங்க.
எல்லாம் விசயமாத்தான்".
இப்பவாவது சொல்லுங்க சார், எங்க கூட்டிகிட்டு போறீங்கன்னு...?
நேர நம்ம இப்போ ஆபீஸ் தான் போறோம்.
எதுக்கு சார்...
எதுவா இருந்தாலும் அங்க வந்து பேசிக்கோ...
நானும் தமிழ் படத்துல வர்ற ஹீரோ மாதிரி என்னைய எதுக்கு போலீஸ் ஸ்டேஷன் கூட்டிகிட்டு போறீங்கன்னு கேட்டுகிட்டே இருக்குறேன். அவங்களும் போலீஸ் மாதிரியே " எதுவா இருந்தாலும் ஸ்டேஷன்ல வந்து பெசிக்கொன்ன்னு சொல்லிகிட்டே இருக்குறாங்க.
இப் சீன் நேர என்னோட ஆபீஸ் மீட்டிங் ரூமுக்கு போகுது. ரெண்டு பெரும் முன்னாடி போறாங்க, நான் இந்த நேரத்துல எதுக்கு என்னைய ஆபீஸ் கூட்டிகிட்டு வந்தாங்கன்னு தெரியாம திரு திருன்னு முழிச்சிக்கிட்டு அவங்க பின்னாடியே போய்கிட்டு இருக்குறேன்.
மீட்டிங் ரூம் வந்தாச்சு, ரெண்டு பெரும் என்னோட ரெண்டு கைய புடிச்சு மீட்டிங் ரூம் கதவ திறந்து என்னைய உள்ள தள்ளி விட்டாங்க. உள்ள பத்த என்னோட பழைய கம்பெனி எம்டி, மேனேஜர், CEO எல்லாரும் உக்காந்து இருக்குறாங்க. கிட்ட தட்ட மீட்டிங் ரூம் புல்லா பெரிய பெரிய ஆளுங்களா உக்காந்து இருக்காங்க. நான் பிளாஷ் பாக்ல சொன்ன அந்த Information Secutiry Chief மொதகொண்டு.
என்னைய உள்ள தள்ளி விட்ட உடனே என்னோட மேனேஜர், அதாவது என்னைய தியேட்டர்ல இருந்து கடத்திகிட்டு வந்தவர் அந்த ஆபிசரை பத்து கண்ணாலேயே பாத்து சொன்னாரு. " நீங்க சொன்ன மாதிரி பையன கூட்டிகிட்டு வந்திருக்கேன், இதுக்கு மேல நீங்க தான் பாத்துக்கொனும். அவரும் கண்ணாலேயே என்கிட்டே அவன விட்டுடு, இனிமே நான் பாத்துகுறேன்னு சொல்லிட்டரு. ( காதலர்கள் தான் கண்ணால பேசுவாங்கன்னு நெனச்சிகிட்டு இருந்தேன். இவங்களுமான்னு நொந்துகிட்டேன் ).போகும் பொது கதவ சாத்திட்டு போன்னு அவரு கண்ணாலேயே சொல்ல இவரும் கண்ணாலேயே ஆகட்டும்னு சொல்லிட்டு கிளம்பிட்டாரு.
எனக்கோ ஒரே பயம். என்ன ஆகா போகுதோ, இது வரை அட்டென்ட் பண்ணாத ட்ரைனிங் எல்லாம் சேத்து இன்னைக்கு மொத்தமா நம்மளோட டவுசெர் உருவ போறாங்கன்னு நெனச்சேன்.
அந்த Information Secutiry Officer இப்போ மெதுவா சேர்ல சாஞ்சு உக்காந்துகிட்டு கைய பின்னாடி கட்டிக்கிட்டு ஒரு கேள்வி கேட்டாரு. அதோட கனவு முடிஞ்சு போச்சு. அவரு கெட்ட கேள்வி இது தான்...
So Mr. Dinesh... What do you think about Information Security in our Company ?
கிளிஞ்சது போன்னு மனசுல நான் நெனச்சிகிட்டு இருக்குறேன்... அப்போ
ரூம்ல இருக்குற எல்லாம் பெரிய மனுசங்களும் என்னோட மூஞ்சிய பத்திக்கிட்டு இருக்குறாங்க, என்னோட பதிலுக்காக... அப்போ என்னோட மூஞ்சி கீழ இருக்குற இந்த குரங்கு மூஞ்சி மாதிரி ஆயிடுச்சு...
சுபம்...
2 comments:
என் கதைன்னு தலைப்பைப் படிச்சே நான் புரிஞ்சுக்கிட்டிருக்கனும்.. ஆனாலும் இதுஓவர் கதையா இருக்கே.. :)
( வேர்ட்வெரிபிகேசனை எடுத்துடுங்க..கமெண்ட் போடறவங்களுக்கு கஷ்டம் )
Kadippa eduthurren
Post a Comment