போன வருடம் இதே நாள், நான் என்னோட பழைய அலுவலகத்தில் இரவு பணியில் இருந்த நேரம்.வழக்கமாக இரவில் அணைத்து வேலைகளையும் நாம் முடித்து விட்டால் படுக்க சென்று விடலாம், யாரும் எதுவும் கேட்க மாட்டர்கள். அன்றும் அதே போல் நான் மூணு மணிக்கு படுக்க சென்றேன்.
திடிரென்று என்னுடைய கைபேசியில் அழைப்பு வந்தது. யாரென்று பார்த்தால் என்னுடைய வீட்டில் இருந்து என் அம்மா என்னை அழைத்தார்கள். வழக்கமாக என்னோட வீட்ல இருந்து போன் பன்றதா இருந்த எனக்கு ஒரு சாயங்காலம் 6 மணிலருந்து 9 மணிக்குள்ள பண்ணி முடிச்சிடுவாங்க. எப்போவாவது ஒரு தடவ அப்பா அவரோட எல்லா வேலையையும் முடிச்சிக்கிட்டு சாவகாசமா ஒரு 12 இல்லன்னா 12.30 க்கு பண்ணுவாரு. அதுவும் 1 மணிக்குள்ள முடிஞ்சுடும். என்னடா இது, இந்த நேரத்துக்கு போன் பண்றாங்களேன்னு யோசிச்சிகிட்டே போன எடுத்தேன்.
நான் : சொல்லுங்கப்பா...
அம்மா : நான் அம்மா பேசுறேன்பா
நான் : சொல்லும்மா, என்ன இந்த நேரத்துல போன் பண்ற, இன்னும் தூங்கலையா...?
அம்மா : தங்கச்சிக்கு இடுப்பு வலி அதிகமா ஆயிடுச்சு... ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு வந்திருக்கோம். டாக்டர் பாத்துகிட்டு இருக்காங்க, இத சொல்றதுக்கு தான் போன் பண்ணேன்... ஆமா நீ எங்க ஆபீஸ்லைய இருக்குற...?
நான் : ஆமாம்மா, ஆபீஸ்ல தான் இருக்கேன். இன்னும் இருபது நாள் ஆகும்னு டாக்டர் சொன்னதா நேத்து தான நீ சொன்ன... அதுக்குள்ள எப்புடி...?
அம்மா : எப்பவும் போற மாதிரி அவளை இன்னைக்கும் வாக்கிங் கூட்டிகிட்டு போனேன். வீட்டுக்கு திரும்புற வழியிலேயே இடுப்பு கொஞ்சம் வலிக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னா, நான் தான் கொஞ்ச பொறுத்துக்கோ, எல்லாம் சரி ஆயிடும்னு சொன்னேன். வீட்டுக்கு வந்து ஒரு மணி நேரம் ஆகியும் அப்புடி தான் இருக்குதுன்னு சொன்னா, அதான் நேர இங்க கூட்டிகிட்டு வந்துட்டேன், நீ எதுவும் பயப்படாத, நாங்க பாத்துக்குறோம்,
நான்: எந்த ஆஸ்பிடல்ல சேர்த்து இருக்கீங்க?
அம்மா: நம்ம எப்பவும் காட்ற ஆஸ்பத்திரி தான்...
நான்: சரி எதுனா பிரச்சினைன்னா எனக்கு உடனே போன் பண்ணு, சரியா...
அம்மா: சரிப்பா...
அம்மா போன வச்சதுக்கு அப்பறம் எனக்கு தூக்கமே வரல, என்ன ஆகுமோ எது ஆகுமோன்னு ஒரே பயம்... சரி எதுவா இருந்தாலும் காலைல பாத்துக்கலாம்னு தூங்க போனேன். ஆனா தூங்க முடியல. நெனப்பு பூர அங்கேயே இருந்துச்சு. ஆனா அதுக்கு அப்பறம் எப்போ தூங்குனேன்னு எனக்கே தெரியல...
சரியாய் காலைல ஒரு அஞ்சு மணி இருக்கும் மறுபடியும் எங்க வீட்ல இருந்து போன் பண்ணாங்க... இப்போ மறுபடியும் எங்க அம்மா தான் பேசுனாங்க. " ஹலோ சொல்லும்மா". எங்க அம்மா பேசாம வெறும் அழுதுகிட்டே இருந்தாங்க, எனக்கோ ஒண்ணுமே புரியல, ஒரே கலவரம் ஆயிட்டேன் நான். "என்னம்மா சொல்லும்மா என்ன ஆச்சு," அப்பறம் எங்க அம்மா கிட்ட இருந்து எங்க அத்த போன வாங்கி "உன் தங்கச்சிக்கு பைய்யன் பெறந்துருக்கன், நீ மாமா ஆயிட்ட" அப்புடின்னு சொன்னாங்க. எனக்கோ சந்தோசத்துல என்ன பன்றதுன்னு ஒன்னும் புரியல... அப்பறம் அம்மா ஏன் அழுதுகிட்டு இருகாங்க ன்னு கேட்டேன், அதுக்கு எங்க அத்த "உங்க அம்மாவுக்கு சந்தோசத்துல பேச்சு வரவே மாட்டேன்குது" ன்னு சொன்னாங்க. இந்த சந்தோஷம் பட வேண்டிய விசயத்துக்கு ஏன் போய் அழுதுகிட்டு இருகாங்க? போன அம்மா கிட்ட குடுங்க, நான் பேசுறேன்...
இப்போ அம்மா போன வாங்கிகிடாங்க... " அம்மா, என்ன பிரச்சினை? ஏன் இதுக்கு போய் அழுதிகிட்டு இருக்க... மூணு புள்ள பெத்தவ நீ இப்புடி அழுவலாமா?" ன்னு கேட்டேன்.
அதுக்கு அம்மா " இல்லப்பா, அவளை உள்ள கூட்டிகிட்டு போனதுல இருந்து எனக்கு என்ன பன்றதுன்னே தெரியல... கடைசியில கொழந்த அழுவுற சத்தம் கேட்ட உடனே எனக்கு அழுகையே வந்துச்சு."
" சரி பைய்யன் யாரு மாதிரி இருக்கான்.?
" குழந்தைய குளிப்பாட்டுரதுக்காக நர்ஸ் எடுத்திகிட்டு போய் இருகாங்க,இன்னும் கொழந்தய வெளியில கூட்டிகிட்டு வரல்ல,
" சரி அப்பா என்ன பண்றாரு "
" அப்பா வீட்டுக்கு துணி எடுக்க போய் இருக்குறாரு, வந்த உடனே பேச சொல்றேன்."
" சரி கூட யாரெல்லாம் இருகாங்க?
" பெரிய அத்த, சின்ன அத்த, அவளோட மாமனார், மாமியாரு எல்லாம் இருக்காங்க."
" அப்புடீன்னா ஓகே,"
" சரிப்பா, நான் அப்பறம் பேசுறேன், உள்ள கூப்புடுறாங்க..."
அம்மா இப்போ போன கட் பண்ணிட்டு போய்டாங்க. உடனே என்ன பன்றதுன்னு புரியல.. வாட்ச்ல டைம் பாத்தேன். மணி 05.30. என் மனசுக்குள்ள, ஊருக்கு போய் பாத்திட்டு வரலாமேன்னு தோணிச்சு. எப்புடி இருந்தாலும் இன்னும் ஒரு 2 நாள்ல அண்ணன் ( சித்தி பைய்யன் ) கல்யாணத்துக்கு போக வேண்டிய வேலை இருக்குது, அதுக்காக நான் 5 நாள் லீவ் ( எந்த ஆபீஸ் லடா அண்ணன் கல்யாணத்துக்கு இவ்வளவு நாள் லீவ் குடுக்குறாங்கன்னு கேக்காதீங்க, அது வேற கத. ) அப்ளை பண்ணி வச்சிருந்தேன். அப்போ போய் பாதுக்கலாமேன்னு தோணிச்சு.
அப்போ தான் என்னோட வொர்க் பண்ற ஒருத்தரு வந்தாரு. அவர் கிட்ட விசயத்த சொன்னேன். முதல்ல அவரு மாமா ஆனதுக்கு வாழ்த்துக்கள் சொல்லிட்டு, என்ன ஊருக்கு போரியானு கேட்டாரு. இல்ல இன்னும் ரெண்டு நாள்ல என்னோட அண்ணன் கல்யாணம் இருக்குது அப்போ போய் பாக்கலாம்னு இருக்கேன்னு சொன்னேன். " யோவ், போய்யா, மாப்புள்ள வந்திருக்காரு போய் பாத்துட்டு வருவியா?" குழந்தைக்கு தாய் மாமனே நீ தான், நீ பக்கமா வேற யார் போய் பாப்பாங்க ?. அப்புடீன்னு சொல்லிட்டு போய்ட்டாரு. இவரு இப்புடி சொன்ன உடனே எனக்கு ஒரே குழப்பம். சரி இதுக்கெல்லாம் ஒரு டீ சாப்டா தான் முடிவு எடுக்க முடியும்னு நேர டீ கடைக்கு போய் உக்காந்தாச்சு.
மீச ஒரு டீய போடு...
என்ன சார், காலிலேயே ரொம்ப சந்தோசமா இருக்கீங்க...
என்னோட தங்கச்சிக்கு பைய்யன் பொரந்திரிக்கு, அதான்...
மீசை தன்னுடைய சார்பாக குழந்தைக்கு வாழ்த்துக்கள சொல்லிட்டாரு.
டீயும் வந்திச்சு. சாப்டு முடிச்சாச்சு. இன்னும் முடிவு வரல.
சரி பேசாமே TL கிட்ட பேசி லீவா ஒரு ரெண்டு நாள் முன்னாடி வாங்கிகிட்டு போய் வந்துடலாம், கல்யாணம் முடிஞ்சு ஒரு ரெண்டு நாள் முன்னாடியே கெளம்பிடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்.
மணி இப்போ 06.15. TL க்கு போன் பண்ணேன். அவரு போன் எடுக்கவே இல்ல. சரி இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு போன் பண்ணிக்கலாம்னு விட்டுட்டேன். மறுபடியும் அவருக்கு போன் பண்ணேன். இப்போ எடுத்தாரு. நிலைமைய அவர் கிட்ட தெளிவா சொல்லி புரிய வைக்குறதுக்குள்ள எனக்கு போதும் போதும்னு ஆயிடுச்சு. ஒரு வழிய அவர ஒத்துக்க வச்சு பெர்மிசன் வாங்கியாச்சு.
அடுத்து என்ன? ஊருக்கு போகணும், பஸ்ல போன ஊருக்கு போறதுக்குள்ள டவுசர் கிழிஞ்சிடும். அதனால நேர நெட்ல போய் இந்திய ரயில்வேயின் வெப்சைட பாத்தா எல்லா ரயிலும் புல்லா போகுது. இவனுங்க ( ஊருக்கு போற நம்ம மக்கள் ) தீபாவளி முடிஞ்சு கூட அடங்க மாட்டேங்க்ரானுங்கலேன்னு நெனச்சிகிட்டு, சரி ஒரு ஸ்பெஷல் ரயில் இருக்குது அதுல ரிசர்வ் பண்ணாமலே போய்டலாமேன்னு நெனச்சு கெளம்பிட்டேன்.
ரயில் 09.30 க்கு கிளம்புவதாக வெப்சைட் ல போட்டு இருந்தானுங்க. நேரா எழும்பூர் போய் டிக்கெட் வாங்கிகிட்டு போய் நின்னா, ரயில்ல எவனயுமே காணோம். பெட்டி பூரா காளிய இருக்குது. எனக்கோ டவுட்டு. என்னடா, இது தான் நம்ம போக வேண்டிய ரயிலான்னு? பக்கத்துல ஒருத்தரு இருந்தாரு, அவர் கிட்ட கேட்டதுக்கு, தம்பி நானும் அது தெரியாம தான் இங்க நிக்கிறேன்ன்னு சொன்னாரு. சரி வேற எவன் அந்த வழிய வர்றன்னு பாத்துகிட்டே இருந்தேன். சரியா நம்ம TTR வந்தாரு, அவர் கிட்ட கேட்டா இது தான் அந்த ஸ்பெஷல் ரயில்ன்னு சொன்னாரு. சரின்னு ஏறி உக்காந்தாச்சு.
போறான் போறான் போய்கிட்டே இருக்குறான். இதோ தாம்பரம் போறதுக்குள்ள ஒரு மணி நேரம் ஆயிடுச்சு. என்னோட பெட்டியில என்னையையும் இன்னொருத்தன தவிரவும் வேற யாருமே இல்ல. எனக்கு மறுபடியும் டவுட்டு. இந்த ரயில் மதுரைக்கு தான் போகுதான்னு. அப்பா தான் தாம்பரத்துல ஒரு நாலு ஐந்து பேரு என்னோட பெட்டியில ஏறுனாங்க. அப்போ தான் கன்பார்ம் ஆச்சு, இது மதுரை போற ரயில் தான்னு. மணி 11 ஆயிடுச்சு இங்கயே. இவன் என்னைக்கு மதுரை போவான்னு தெரியலயேன்னு மனசுக்குலையே நெனச்சிகிட்டு இருந்தேன்.
ஒரு வழிய மதுரைக்கு 8 மணிக்கு வந்து சேந்தாச்சு. இப்போ மதுரைல இருந்து எங்க ஊருக்கு பஸ்சு புடிக்கணும். அதுக்கு பெரியார்ல இருந்து மாட்டு தாவணி போய் அங்க இருந்து போகணும். இப்புடி ஊர் போய் சேர்றதுக்குள்ள மணி 09.30pm.
வீட்டுக்கு போய் துணி மாத்திகிட்டு ( வேற என்ன, நம்ம பாரம்பரிய உடை கைலி தான் ) ஹாஸ்பிடல் போயி பய்யன பாத்துக்கு அப்பறம் தான் எனக்கு அப்பாடான்னு இருந்துச்சு.
எனக்கு ஒரு கெட்ட பழக்கம் சின்ன வயசுல இருந்து இருக்குது. எப்போ சின்ன பசங்கள பாக்க போனாலும், போன உடனே மொதல்ல செய்யுற வேலை, பசங்களோட கை மற்றும் கால் விரல எண்ணி பாக்குறது. இப்போவும் அதா தான் பண்ணேன். தொட்ட உடனே மாப்பிள்ள டென்ஷன் ஆயிட்டாரு. அப்புடி ஒரு அழுக. ஹாஸ்பிடல்ல இருந்த என்னோட அம்மாவும் அத்தையும் என்னைய அடிக்க வர மீ தி எஸ்கேப்...
இன்று அவன் முதல் பிறந்த நாள். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment