Thursday, December 17, 2009
சுடோகு
ராத்திரி தூங்குனா தூக்கத்துல பல பல பலான கனவுகள் வருதா உங்களுக்கு...
தூக்கத்துக்கு நடுவுல கண்ட கனவால பயந்து எந்திரிச்ச அனுபவம் இருக்க உங்களுக்கு... ?
இதெல்லாம் கண்டிப்பா எல்லாருக்கும் எப்போவாவது நடந்தே இருக்கணும்...
இந்த பிரச்சினைகளில் இறந்து வெளியில் வர ( வெளியில் வர விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும் ) ஒரு அருமையான அருமருந்தாக நீங்கள் இந்த சுடோகு விளையாட்டை உபயோகிக்கலாம்.
எப்புடின்னு கேக்குறீங்களா .... ?
எனக்கு இப்படி தான் ராத்திரியில தூங்குன தூக்கம் வராம கனவுகள் வந்து தொல்லை கொடுக்கும். அதன் விளைவுகள் தான் என்னுடைய முந்தின பதிவுகள்.
அந்த பதிவுல நீங்க படிச்சது எல்லாம் ஒரு முன்னோட்டம் தான். ஆனா மத்த கனவுகள எல்லாம் இங்க உங்க கூட பகிர்ந்துகுற அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை அப்பறம் கூச்சமாவும் இருக்குது.
இந்த பிரச்சினயால ( கனவுகள் ) நான் கடந்த 4 வருடங்களாக பல நாள் என்னுடைய தூக்கம் பறி போய் இருக்கிறது.தூக்கம் பரி போவதுன்னா மொத்தமா தூங்காம இருக்கிறது இல்ல, தூங்குன தூக்கம் வரும் ஆனா வெளியில நடக்கிறது எல்லாமே நமக்கு கேக்கும. எவன் என்ன பேசுறான், எவன் என்ன பண்ணுறான் எல்லாமே கேக்கும். ஆனா எந்திரிக்க தான் முடியாது. காரணம் இரவு முழுவதும் தூங்குன ஒரு வகை தூக்கம் தான். உடம்பு தூங்குது, ஆனா மூளை மட்டும் ஏதோ ஒன்னு யோசிச்சிகிட்டே இருக்குது.
அப்புடியே தூங்கினாலும் காலைல எந்திரிச்ச ஏதோ ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி நவுதுன மாதிரி உடம்பு அப்புடி ஒரு அலுப்பா இருக்கும். இதை என்னுடைய நண்பர் ஒருவரிடம் சொன்னதற்கு அவரு தான் இந்த முறையை முயற்சி செஞ்சு பாக்க சொன்னாரு. பலன் உடனடியா கிடைக்கலை என்றாலும் ஒரு மாசத்துக்கு அப்பறம் கிடைத்தது.
அவரு சொன்னது இது தான். "தூங்குறதுக்கு முன்னாடி ஒரு பத்து இல்லை பதினைந்து நிமிடம் சுடோகு விளையாடு. அதுக்கு அப்பறம் போய் தூங்கு, நல்ல தூக்கம் வரும் எந்த வித கனவுகளும் இல்லாம" அப்புடீன்னு சொன்னாரு. நானும் மொதல்ல இத நம்புற மாதிரி இல்ல. சரி ஒரு தடவ முயற்சி செஞ்சு பாக்கலாமேன்னு பண்ணேன். பலன் தெரிய ஆரம்பித்தது.
நான் வழக்கம் போல் தூங்குறதுக்கு இப்போ எல்லாம் 12 மணி ஆயிடுது. இந்த புது மடிகணினி வாங்குனதில இருந்து ஒரு மணி நேரம் அதிகமாயிடுச்சு. அதுக்கு முன்னாடி 11 மணிக்கு எல்லாம் தூங்கிடுவேன். இத பத்தி சொன்னா அதுவே ஒரு தனி பதிவா போடலாம். சோ அதனால அதா விட்டுடுவோம்.
ரொம்ப கஷ்டப்பட்டு ஹர்ட் லெவல் எல்லாம் விளையாட தேவை இல்ல. சும்மா ஒரு ஈசி கேம் வச்சு ரெண்டு ரவுண்டு விளையாடுனா போதும். கனவுக்கு மட்டும் இல்ல, தூக்கம் வராம அவதிபடுபவர்கள் கூட இந்த முறையை முயற்சி செஞ்சு பாக்கலாம்.
இப்போ எல்லாம் தூங்குன அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் தூக்கம் உறுதி. அப்பறம் காலைல எந்திரிச்சா உற்சாகமா இருக்கும். எனக்கு இப்போ ஓரளவுக்கு நிம்மதியா இருக்குது.
அப்பறம் உங்களுக்கும் இதை முயற்சி செஞ்சு பாக்க ஆசை இருந்தா பண்ணி பாருங்க... எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
இப்பவும் எனக்கு கனவுகள் வந்துகிட்டு தான் இருக்குது.
ஆனா எல்லாமே நம்ம விக்ரமன் சார் படம் மாதிரி பீல் குட் கனவுகளா இருக்குது... அதை நெனச்சு ஆபீஸ்ல வேலை இல்லாத ( !? ) நேரத்தில் சிரிச்சிகிட்டு இருக்குறேன்...
டிஸ்கி :- இந்த முறை எனக்கு சிறந்த பலனை தந்ததால் நான் இங்கு இதை சிபாரிசு செய்கிறேன். இந்த முறை உங்களுக்கு பலன் தராத பட்சத்தில் அதற்கு நானோ என்னுடைய நிறுவனமோ பொறுப்பு எடுத்து கொள்ளது...
வாழ்க வளமுடன்...
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
யப்பா, தனியா தூங்கும் போது வழக்கமா தூங்குற நேரத்துக்கு அரை மணி நேரம் தாமதம் ஆனாலும் எனக்குக் காதுக்குள்ள யாரோ பேசுற மாதிரி இருக்கும். கட்டிலோட என்னைத் தூக்கிட்டு போற மாதிரி ஒரு பிரமை இருக்கும். நல்ல ஐடியா குடுத்திருக்கறே...
வந்ததுக்கு ரொம்ப நன்றி விஜய் அண்ணே... எனக்கும் அதே பிரச்சினை தான். அதான் இந்த முறையை முயற்ச்சி பண்ணி பாத்தேன்.
Post a Comment