Saturday, December 4, 2010

சிக்கு புக்கு - டயர் பஞ்சர் ஆயிடுச்சு

    ஆர்யாவை நம்பி படத்துக்கு போனதுக்கு எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்... படம் ஆரம்பித்து ஒரு மணி நேரம் உள்ளே இருந்தாலே பெரிய விஷயம். சரி பாத்தாச்சு, அப்புடியே விமர்சனம் போட்டுடலாம்னு வந்தேன்... 


ஆர்யா ஷ்ரேயா... லண்டன் வாழ் இளைஞ இளைஞிகள். இவங்க தன்னுடைய சில சொந்த பிரச்சினைகளுக்காக இந்தியா வர, வந்த இடத்தில் பெங்களூர்-ல்இருந்து மதுரை செல்ல வேண்டிய விமானம் ரத்தாக, தரை மார்க்கமாக மதுரை செல்ல முடிவு செய்து புறப்படுகிறார்கள்... இவங்க மதுரை போயி சேருவதர்க்குள் நடைபெறும் காப்ராக்களே, திரைப்படம். 

நடுவில் அப்பா ஆர்யாவினுடைய காதல் டிராக் வேறு தனியாக செல்கின்றது. அந்த கதை ஏன் தான் வருகிறதென்றே தெரியவில்லை. அப்புடி வந்தாலும் கடைசியில் ஒரு ட்விஸ்ட் வச்சாறு பாருங்க டைரடக்கரு... நான் அப்புடியே மெர்சல் ஆயிட்டேன்... அப்பா ஆர்யா கதாபாத்திரம் கிளைமாக்ஸ்-யில் ஒண்ணும் இல்லாத விசயத்துக்காக படம் முழுக்க காட்டப் பட்டது தான் கொடுமை. அதுக்கு பதிலா அந்த கதாபத்திரைத்தே வைத்து ஒரு சுவையான கதையை சொல்லி இருக்கலாம். 


படத்துல வர எல்லா காட்சிகளும் சரியான ஸ்லோ அப்புறம் எளிதில் கணிக்க கூடியதா இருக்குது. அப்புறம் படத்தோட ஒரு பெரிய பலவீனம் பாடல்கள். 

மதராசபட்டினம் மாதிரி பழைய காலத்து கதைன்னு சொன்ன உடனே நம்ம ஆளு சரின்னு சொல்லிட்டாறு போல... 

அண்ணே சந்தானம் பழைய படங்களில் வருவது போல, படத்திற்க்கு சிறிதும் சம்பந்தமே இல்லாத தனி டிராக் காமெடியாக வந்து செல்கின்றார். அதுவும் ஒண்ணும் சிறப்பாக இல்லை. ஒரு வேலை பாஸ் (எ) பாஸ்கரன்-யில் இவருடைய அதீத பங்கினால் தான் படம் வெற்றியடைந்ததால் இதில் வேண்டுமென்றே காட்சிகளை குறைத்து விட்டார்களோ என்னவோ ? யாருன்னு நான் தான் சொல்லி உங்களுக்கு தெரியனுமா ?  



ஷ்ரேயா... இந்த அம்மா சந்தோஷ் சுப்ரமணியம் படத்தை நெறைய தடவை பாத்துட்டாங்கன்னு நினைக்குறேன். ஜெனீலியா-வின் அட்டு காப்பியாக படம் முழுவதும் வலம் வருகிறார். 

ஒரு வேளை உங்களுக்கு இந்த படத்தை தியேட்டர் போயி பாக்க முடியலைன்னா, இடைவேளை வரை ஜப் வீ மேட்-ஐயும் அதாங்க கண்டேன் காதலையும், இடைவேளைக்கு அப்புறம் புதுக்கோட்டையிலிருந்து சரவணனும்... கிளைமாக்ஸ்-க்கு குட்டி இல்லைன்னா ஏதாவது ஒரு தமிழ் படத்தையும் பாத்துக்குங்க... 

முடியல... அப்புறமா வர்றேன்... 

டிஸ்கி:- என் நண்பர் Unstoppable இல்லைன்னா ரத்த சரித்திரம் பாக்கலாம்னு சொன்னாரு, நான் தான் அவரை வம்படியா இந்த படத்துக்கு கூட்டிட்டு போனேன். பாதி படத்துலையே என்னை அவரு கெட்ட வார்த்தைல திட்ட ஆரம்பிச்சிட்டாரு. என்னத்த சொல்றது போங்க... 

இந்த காயத்தை ஆற்ற நாளைக்கு ரத்த சரித்திரம்... 

இண்ட்லி மற்றும் தமிழ்மனத்துல ஓட்டு போடுங்க... அது உங்க கடமை... 

4 comments:

Ramesh said...

செமா காண்டாயிட்டீங்க போல.. இன்ட்லில பப்லிஸ் பண்ணலியா...

Venu said...

அண்ணா டிரைலர் பாத்துட்டே கடுப்பாயீட்டேன். ரொம்ப கொடுமை.

pichaikaaran said...

நச் விமர்சனம்

DR said...

ரமேஷ்,வேணு,பார்வையாளன் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

@ரமேஷ் அது என்னமோ தெரியலை, இண்ட்லி பட்டன் எனக்கு மட்டும் வேலை செய்ய மாட்டேங்குது.

@வேணு படமே அப்புடி தான் இருக்குது

@பார்வையாளன் நன்றி நண்பா