கடைசியா நானும் இந்த படத்தை பாத்துட்டேன். நான் பண்ணின ஒரே தப்பு பஞ்சதந்திரம், பம்மல் உவ்வே சம்பந்தம் மற்றும் தெனாலி அளவுக்கு எதிர்பாத்தது தான்.பம்மலைத் தவிர்த்து மீதி இரண்டும் கமல் மற்றும் ரவிக்குமார் ஜோடி கலக்கி இருந்தார்கள். இதில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறார்களா என்றால் கசப்புடன் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
கதை இந்நேரம் நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியணும்னு அவசியம் இல்லை. பாதி வலைப்பதிவர்கள் கிழித்து தொங்கப்போட்டு இருப்பார்கள். இருந்தாலும் விட்ற மாதிரி இல்லை நான். நல்ல டைமிங்கோட ஒரு ரைஹ்மிங்கோட சொல்றேன் கேளுங்க... ( வசன உதவி அநேகமாக சிங்கமுத்து-தலைநகரம் படத்திலிருந்து )
Madhavan and Kamal Hassan |
ஓய்வு பெற்ற ராணுவ தளபதி கமல், தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரின் புற்று நோய் சிகிச்சைக்காக பணம் ஈட்டும் பொருட்டு தொழிலதிபர் மாதவன் சொல்லும் ஒரு உளவாளி வேலைக்கு ஒத்துக்கொள்கிறார். தான் காதலிக்கும் திரைப்பட நடிகையின் பழக்க வழக்கங்களின் மேல் சந்தேகம் கொள்ளும் மாதவன், அதை உறுதிப்படுத்தி கொள்வதர்க்காக கமலை அனுப்புகிறார். ஆரம்பத்தில் இருந்தே கொடுத்த வேலையை செவ்வனே செய்யும் கமல், திரிஷா ஒரு "நல்ல பெண்" என்று மாதவானிடம் சான்றிதழ் வழங்குகிறார்.
Kamal Hassan and Trisha |
தான் நம்பிய விஷயம் ( திரிஷாவுக்கு வேறு ஒருவருடன் கள்ள உறவு ) மற்றவர்கள் பொய் என்று சொல்வதை ஏற்கின்ற மனமில்லாத மாதவன் "நல்லவளை நல்லவள் என்று சொல்வதற்க்கு உனக்கு எதுக்கு கூலி" என்று நினைத்து, கமலுக்கு பேசிய பணத்தை கொடுக்க மறுத்து நாடு திரும்பும்படி கூறுகின்றார். மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நண்பனை காக்க இந்த பணம் அவசியம் என்பதால், தான் வேலை முடித்து விமான நிலையத்துக்கு திரும்பும் பாதையில் த்ரிஷாவை வேறு ஒருவருடன் பார்த்ததாக பொய்யுறைக்கும் கமல், தன் பணம் கிடைக்கும் வரை இந்த பொய்யை தொடர முடிவு செய்து... அதன் பிரதி பலன்களே மீதி...
இதன் நடுவில் த்ரிஷா தான் எதிர்பாக்கும் அத்தனை புருஷலட்சணமும் கமலிடம் இருப்பதாக நம்பி அவரை காதலிக்க தொடங்க... மாதவனின் காதல் பப்படம் ஆகிறது. அதை சரிக்கட்ட இன்னொரு கேரக்டர் இருக்கின்றது படத்தில்... முடிஞ்சா நீங்களே கண்டுபுடிங்க... நடுவில் கமலுக்கென்று ஒரு ஃபிளாஷ்பேக். அது வெறும் ஒரு பாட்டுக்கும், கமல் மீதான த்ரிஷாவின் காதலுக்கும் சற்று உரம் சேர்க்கும் படி அமைந்திருக்கின்றது.
Madhavan, Kamal Hassan and Trisha |
என்னடா இவ்வளவு கதை சொன்னவன் முக்கியமான விஷயத்தை சொல்லாமலே போய்ட்டானேன்னு பாக்குறீங்களா... அது மட்டுமாவது இனிமே இந்த விமர்சனம் படிச்சிட்டு போறவங்களுக்கு ஒரு சர்ப்ரைஸாக இருக்கட்டுமே என்று நிர்வாகம் முடிவு செய்துள்ளது. உங்களுக்கு நேரம் இருந்து படம் பார்ப்பதற்க்கு ஒரு நல்ல துணை (ஃபிரண்ட்ஸ்-ன்னு கூட வச்சிக்கலாம்) இருந்து, காசும் கையில இருந்தால் தாராளமாக இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்.
பின் குறிப்பு :- பஞ்ச தந்திரம் மற்றும் பம்மல் முதன் முறை திரை அரங்கிர்க்கு சென்று பார்த்தபோது சரியாக அதிலுள்ள காமெடி-கள் புரியாமல் போனதால் என்னால் அவ்வளவு ஆழமாக ரசிக்க முடியவில்லை. ஆனால் அதற்க்கு அப்பறம் ரொம்ப புடிச்சு போனது வேற விஷயம். ஆனா இதில் அதற்கான முகாந்திரம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒரு வேலை கிரேஸி மோகனுக்கு மட்டுமே வாய்த்த வாய்ப்பாக இருக்கலாம்.
1 comment:
பிளாக் எழுதி 4 மாசம் கழிச்சு ஒரு கமெண்ட். ரொம்ப சந்தோஷம் ராஜேஸ்வரி.
Post a Comment