Saturday, July 9, 2011

அவன் இவன் - என் பார்வை



பொதுவா இந்த மாதிரி கதைகளில் ரெண்டு ஹீரோக்களில் ஒரு ஹீரோ திடீர்ன்னு வில்லனாகி மத்தவங்களுக்கு டார்ச்சர் கொடுத்து, அதை மெயின் ஹீரோ சமாளித்து வெளியில் வர்றதுன்னு போகும்...  ஆனா இங்க ரெண்டு பேருமே வெறும் சப்பையா முதல் பாதி படத்தை போக்குரத தவிர வேற எதுவும் உருப்படியா பன்னதா தெரியல...

அதிலும் அவங்க ரெண்டு பேருக்கும் அமைக்கப்பட்ட காதல் காட்சிகள், தமிழ் சினிமாவில் இதுக்கு மேல காதல் காட்சி எடுக்க முடியாது என்பதை சொல்லாமல் சொல்லுது... அந்த அளவுக்கு வறட்சி... 

சரி, அது தான் இல்லைன்னு ஆகி போச்சே, அப்புடீன்னா இவங்க ரெண்டு பேரை தவிர ஒரு பெரிய வில்லன் அநேகமாக ஹைனஸ் வருவான்னு நானும் முக்காவாசி படம் வரைக்கும் வெயிட் பண்ணா... திடீர்ன்னு நம்ம JK எண்டர் ஆகி மாடு பத்துராறு... அந்த ஆளு உள்ள வந்த உடனே பாதி டயர்ட் ஆகி போச்சு... எப்புடியும் இவன் தான் கிளைமாக்ஸ்-ல வந்து சாக போரான்னு தெரிஞ்சதால... 

சரி, அதுக்குள்ள ஹைனஸ் கேரக்டர் வில்லனா மாறி, ஹீரோக்களின் சாகசங்களால் அவரு கடைசி திருந்தி மனம் வருந்தி, அந்த நேரத்துல நம்ம JK உள்ள நொலஞ்சு தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதியாம் கிளைமாக்ஸ்-இல் ஃபைட் வைக்கும் மரபை செய்வார்ன்னு பாத்தா... 

படிக்கிற உங்களுக்கே டயர்ட்-ஆ இருந்தா, எழுதுன எனக்கு எவ்வளவு கடுப்பா இருக்கும்... போயி புள்ள குட்டிங்கள படிக்க வைங்க...